districts

திருமண ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை எஸ்.பி.யிடம் இளம்பெண் புகார்

ஈரோடு, மே 28- ஈரோடு வட்டம், சித்தோடு அருகே உள்ள கொங்கம்பாளையத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும், பெருந்துறை வட்டம், காஞ்சிக் கோயில் எல்.எம்.எஸ் பகுதியைச் சேர்ந்த சாம் டொனால்ட் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அச் சமயம் அப்பெண்ணிடம் திருமண ஆசை காட்டி சாம் டொனால்ட் பாலியல் வன் கொடுமை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந் துள்ளார். இதனால், அப்பெண் கருவுற்ற  நிலையில் சேலத்தில் உள்ள தனியார் மருத் துவமனையில் கருகலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதன்பின் சாம்  டொனால்ட் உறுதியளித்தபடி இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுத்த டன், அவரது சாதி குறித்து இழிவாக பேசியும் வந்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக்கூறி, பாதிக்கப்பட்ட இளம் பெண் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் நிர்வாகிகள் துணையுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவினை அளித்தார். இதனை பெற் றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப் பாளர், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளித்தார். இந்த புகார் மனுவினை அளிக்கையில்  மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பா. லலிதா, பொருளாளர் கொங்குநதி, தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செய லாளர் பி.பி.பழனிசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.