புதுக்கோட்டை, டிச.23- திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, தனது தங்கையின் தோழியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் வெள்ளியன்று தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவடம் இலுப்பூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (25). இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தனது தங்கையின் தோழியை காதலிப்பதாக வும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அப்பெண் கருவுற்ற நிலையில் ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், ஜானகிராமன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிய துடன், கொலை செய்துவிடுவதாகவும் மிரட் டியுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கீரனூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், அவரைக் கைது செய்து சிறை யில் அடைத்தனர். இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் யோகமலர் ஆஜரானார். வழக்கு விசாரணையின் நிறைவில் நீதிபதி ஆர்.சத்யா, குற்றவாளி ஜானகி ராமனுக்கு, பெண்ணை பாலியல் வன்கொ டுமை செய்த குற்றத்துக்கு ஆயுள் சிறையும், ரூ.2 லட்சம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்கு 2 ஆண்டுகள் சிறை யும் ரூ.20 ஆயிரம் அபராதமும், ஏமாற்றிய குற்றத்துக்காக ஓராண்டு சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், ஆபாசமாகத் திட்டிய குற்றத்துக்காக 3 மாதங்கள் சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக் கிழமை தீர்ப்பளித்தார்.