மதுராந்தகம், ஜூன் 28- 3 மாதமாக குடிநீர் விநி யோகம் செய்யாததைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த திம்மா புரம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக ஊராட்சி நிர்வாகம் சரிவர குடிநீர் விநி யோகம் செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்க ளுடன் சாலை மறியலில் ஈடு பட்டனர். திம்மாபுரம் கிராம மக்க ளுக்கு பழைய கிணற்றில் இருந்து குடிநீர் வழங்கப் பட்டு வந்தது. தனியார் பால் நிறுவனத்தில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுகளால் அந்த குடிநீர் கிணறு தூர்ந்து போனது. எனவே, ஏரிக்குள் புதிதாக குடிநீர் கிணறு எடுக் கப்பட்டுள்ளது. அந்தக் கிணற்றிலிருந்து புதிய பைப் லைன் பதிக்காமல் காலத்தா மதம் செய்கின்றனர். இதுகுறித்து பலமுறை இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ஊராட்சி செயலாளரும் மக்கள் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் உள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலை யில் முறையாக தினசரி குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர்.