tamilnadu

img

உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக உழைக்கும் பெண்கள் மறியல்

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது

சென்னை, மார்ச் 6 - பெண் தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டலுக்கு முடிவு கட்ட வலியுறுத்தி வெள்ளியன்று (மார்ச் 6) நாடு முழுவதும் உழைக்கும் பெண்களின் சிறை நிரப்பும் மறியல் போராட்டம் நடை பெற்றது. அனைத்து வகையிலும் பெண் களுக்கான சமத்துவத்தைபெற வும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக வும் மறியல் நடத்த சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு அறை கூவல் விடுத்திருந்தது. அதனை யொட்டி வெள்ளியன்று உழைக்கும்  பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இந்த மறியல் போராட்டங் கள் நடைபெற்றன.

அனைவருக்கும் வேலை வழங்குவதோடு, குறைந்த பட்ச ஊதியமாக 18 ஆயிரம் ரூபாயும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க  வேண்டும்; அங்கன்வாடி, ஆஷா திட்டப் பணியாளர்களை அரசு ஊழி யராக்குவதோடு, காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும்; ஒப்பந்த ஊழி யர்களை பணி நிரந்தரம்செய்ய வேண்டும்;  பெண்கள், குழந்தை களுக்கு எதிரான கொடுமைகளை, வன்முறைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; முறைசாரா தொழிலாளர் களுக்கு ஓய்வூதியம் பெறும் வயதை 55 என நிர்ணயிக்க வேண்டும்; கேரளத்தை போன்று வர்த்தக நிறு வனங்களில்  தொழிலாளர்கள் அமர இருக்கை வசதி உள்ளிட்ட சட்டச் சலு கைகளை வழங்க வேண்டும்; பெண்களுக்கான 33 விழுக்காடு ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும்;

பணியிடங்களில் பாலியல் புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டும்; அனைத்து நிறுவன ங்களிலும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கவேண் டும்; கூட்டுறவு தையல் தொழிலா ளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்குவதோடு, துணி களை கொண்டு செல்ல இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்; சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டத்தில் முழக்கங் கள் எழுப்பப்பட்டன. மறியல் போராட்டங்களில் பங்கேற்றவர் களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை

தென்சென்னையில் சைதாப் பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற மறியல் போராட்டத் திற்கு ஒருங்கிணைப்பாளர் என்.சாந்தி, துணை ஒருங்கிணைப்பாளர் சித்திரைச்செல்வி ஆகியோர் தலை மை தாங்கினர். சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாவட்டத் தலைவர் இ.பொன் முடி, பொருளாளர் ஏ.பழனி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். வடசென்னையில் புரசை வாக்கம் தொலைபேசி அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் இரா.மணிமேகலை தலைமை தாங்கினார். இணை அமைப்பா ளர்கள் நிர்மலா, சாலட், புனிதா உதயகுமார், குட்டிராணி, சிஐடியு  மாவட்டத்தலைவர் எஸ்.கே.மகேந் திரன், செயலாளர் சி.திரு வேட்டை, பொருளாளர் வி.குப்பு சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.