செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் நிலையங்களில் 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தொழிலாளர்கள், முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதிக்க வேண்டும், நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திங்களன்று (மே 11) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிசிடம் மனு அளித்தனர்.