tamilnadu

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிப். 15 கருத்துக் கேட்பு கூட்டம்

செங்கல்பட்டு,பிப்.9-  செங்கல்பட்டு மாவட்ட நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக் கான  வார்டுகள் வரைவு மறுவரையறை கருத்துக் கேட்புக் கூட்டம் பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெற வுள்ளது என மாவட்ட ஆட்சி யர் அ.ஜான் லூயிஸ் தெரி வித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-2011 ஆம்  ஆண்டு  மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத் தைச் சேர்ந்த,  8 நகராட்சி வார்டு, 12 பேரூராட்சி வார்டு மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்க ளில் அடங்கிய கிராம  ஊராட்சி வார்டு,  ஊராட்சி ஒன்றிய வார்டு மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு களில் வரைவு மறுவரை யறை விவரங்களை பிப்ரவரி 1 ஆம்  தேதி வெளியிடப்பட் டது.  இதன் மீது பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் கருத்துக்கள், மனுக்களாக பெறப்பட்டு வரு கிறது.இந்தக் கருத்துக்கள் மீது விவாதித்து முடிவு செய்ய பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் கருத்துக் கேட்புக் கூட்டம் பிப்ரவரி  15 ஆம் தேதி  காலை 10.00 மணியளவில்  செங்கல்பட்டு அரசு மருத்து வக் கல்லூரி கலையரங்கில் நடைபெறுகிறது.  கருத்துகள் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்களை நேரில் ஆஜராகி தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.