tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை தாக்கிய போலீசார்

செங்கல்பட்டு, டிச.24- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடிய வாலிபர்கள் மற்றும் பெண்களை போலீசார்  கடுமையாக தாக்கியுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமை யான  போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டில் ரயில் மறியல் போராட்டம் செவ்வா யன்று (டிச. 24)  நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்பாரதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வர்கள் ரயில் மறியலில் ஈடுபடுவ தற்காக செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்றனர். பின்னர், செங்கல்பட்டு ரயில் நிலைய, நுழைவாயிலில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியபோது தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது, மாண வர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தமிழ்பாரதி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் க.புருசோத்தமன் ஆகியோரின் கழுத்தை நெறித்துத்து காவல்துறையினர் கடுமையாக தாக்கினர். இதில் தமிழ்பாரதி மயக்க மடைந்தார். மேலும் மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களை காட்டு மிராண்டித்தனமாக காவல்துறையி னர் இழுத்துச் சென்று கைது செய்தனர். போராட்டத்தின் போது வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம.பா.நந்தன் பேசுகையில், ‘ மக்களின் உரிமைக்காக போராடுபவர்களை காட்டுமிராண்டித் தனமாக தாக்கும், காவல்துறை மாவட்டம் முழுவதும் விற்பனையாகும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்க முடியாமல் வேடிக்கை பார்ப்பதுடன், துணை போகிறது. போராடுபவர்கள் மீது காவல்துறை நடத்தும் அடக்கு முறை கண்டிக்கத்தக்கது’ என்றார். இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தின் மாநிலச் செயலா ளர் வா.பிரமிளா, மாவட்டத் தலைவர் தமிழரசி, பொருளாளர் கலையரசி, மாவட்ட துணைத் தலைவர் பிரேமா, வாலிபர் மாவட்டச் செயலாளர் க.புரு ஷோத்தமன், துணைத் தலை வர்கள் பிரியங்கா, ஐஸ்வர்யா, பரணி வர்மன், மாணவர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்தராஜ், அஜய், வினித் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.