tamilnadu

வாலிபர் சங்க 17வது மாநில மாநாடு கள்ளக்குறிச்சியில் செப். 11,12 ,13 தேதிகளில் நடக்கிறது

செங்கல்பட்டு, ஜூன் 15- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17-வது தமிழ் மாநில மாநாடு வருகிற செப்டம்பர் 11,12,13  ஆகிய தேதியில் கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ளது. வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் செங்கல்பட்டில் மாநிலத் தலைவர் என்.ரெஜீஷ்குமார் தலை மையில் நடைபெற்றது.  மாநிலச்  செயலாளர் எஸ்பாலா, மாநில நிர்வாகிகள், பாலசந்திரபோஸ், சிங்காரவேலன், செல்வராஜ், பிரியசித்ரா, நந்தன், கனகராஜ். புரு ஷோத்தமன், ஜீவானந்தம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். 

மோடி அரசின்  வேதனை கண்காட்சி!
ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவேன் என்று சொல்லிவிட்டு, கடந்த எட்டு ஆண்டுகளில் 12 கோடி பேரின் வேலையை பறித்த கொடுமை தான் நடந்துள்ளது மறுபுறம், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்து, இருக்கிற வேலைவாய்ப்பையும் வெட்டிச் சுருக்குகின்ற பணியில்  ஒன்றிய பாஜக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதை அம்பலப் படுத்தும் விதமாக வரும் ஜூன் 30 அன்று தமிழகம் முழுவதும்  8 ஆண்டுகால மோடி அரசின் வேதனை விளக்க கண்காட்சியை நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது.

ஃபோர்டு ஆலையை மூடுவதை நிறுத்துக!
தமிழகத்தில் ஆட்சியாளர்கள் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங் கள் மூலம் தொழிற்சாலை அமைக்க  நிறைய சலுகைகளுடன் அனுமதி  அளிக்கும் நிலையில், மறைமலை நகர் அருகிலுள்ள ஃபோர்டு கார் உற்பத்தி தொழிற்சாலை கடந்த ஓராண்டுக்கு முன்பே மூடப் போவதாக அறிவித்துள்ளது. இதை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் தொழிலாளர்களிடம் தமிழக அரசும் தொழிலாளர் நலத் துறையும், உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தி ஆலை தொடர்ந்து இயங்க உரிய தலையீடு செய்ய வேண்டும்.

தனியார் ரயில் இயக்கும் முடிவை கைவிடுக
மக்களின் வரிப்பணத்தில் உரு வாக்கப்பட்ட ரயில்வே கட்டமைப்பை  தனியார் லாபம் சம்பாதிக்க மடை மாற்றம் செய்வது பேராபத்தாகும். இத்தகைய நடவடிக்கையால் அரசு வேலை பறிபோகும். மேலும் 12  லட்சத்திற்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் கடும் பாதிப்பை சந்திக்கும்  நிலை ஏற்படும். எனவே இந்திய ரயில்வேயை அரசு மேம்படுத்தி காலி  இடங்களை முறையாக நிரப்பி அரசே ரயில் இயக்கும் பணியை செய்ய  முன் வர வேண்டும்.

தனிச் சட்டம் இயற்றுக!
தமிழகத்தில் தொடரும் சாதி  ஆணவக் கொலைகள் வேதனையை யும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. நீண்ட நெடிய சாதி ஒழிப்பு போராட்டம், சமூக நீதி காத்திட வும் இயங்கிய சமூக சீர்திருத்த வாதிகளின் மண்ணாக தமிழகம் விளங்குகிறது. எனவே சாதி ஆண வப்படுகொலைகளை தடுக்க வேண்டும். “எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் கல்வி” கேட்டு இளைஞர்களுடைய நலனை முன்னிறுத்தி தொடர்ந்து போராடி வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 17-வது தமிழ் மாநில மாநாட்டை வருகிற 2022 செப்டம்பர் 11,12,13 ஆகிய தேதியில் கள்ளக் குறிச்சியில் பேரணி பொதுக் கூட்டத்துடன் நடத்துவது என்றும் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.