tamilnadu

img

தேசிய தலைமையுடன் மோதல் பஞ்சாப் மாநில பாஜக தலைவர் கட்சியை விட்டு ஓட்டம்?

பஞ்சாப் மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான சுனில் குமார் சாகர் கடந்த 2022இல் பாஜகவில் இணைந்தார். பாஜக வில் இணைந்ததும் சுனில் குமாருக்கு தேசிய தலைமை பஞ்சாப் மாநில தலைவர் பதவியை வழங்கியது. 

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் படுதோல்வியால் தேசிய தலைமைக் கும், சுனில் குமார் சாகருக்கும் இடை யே மோதல் ஏற்பட்டதாகவும், தன்னை சுதந்திரமாக செயல்படாமல் தடுத்ததே தேர்தல் தோல்விக்கு காரணம் என சுனில் குமார் கூறியதாகவும் செய்திகள் வலம் வந்தன. அதன்பிறகு வெளியில் தலைகாட்டாமல் இருந்த சுனில் குமார், வெள்ளியன்று தலைமையுடன் விரிசல் அதிகரித்ததால் மாநில தலைவர் பதவி யை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், தேசிய தலைமையிடம் ராஜினாமா கடிதம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் மூலம் செய்திகள் வெளி யாகின. ஆனால் ராஜினாமா கடிதத்தை பாஜகவின் தேசிய தலைமை ஏற்க வில்லை எனக் கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் வரும் அக். 15 அன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சுனில் குமார் ராஜினாமா அறிவிப்பு பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.