கேரளாவில் உள்ள 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கேரள வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த மாதங்களில் தென்மேற்கு பருவக்காற்று தீவிரமானதை தொடர்ந்து மழை பொலிவு அதிகம் ஏற்பட்டது.இதனால் கேரள மாநிலம் வெள்ளம்,நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றத்தை சந்திக்க நேர்ந்தது.இச்சீற்றத்தால் பல பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து,வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர்.தற்போதைய நிலையில் அவர்களின் இயல்பு வாழ்கை திரும்பிவரும் வேலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என கேரளா வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது,இன்னும் கேரளாவின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளனர்.கொல்லம்,கோட்டயம்,ஆளப்புழா,மலப்புரம்,கோழிக்கோடு,வயநாடு,கண்ணூர்,எர்ணாகுளம்,இடுக்கி,காசர்கோடு போன்ற மாவட்டங்களுக்கு ”மஞ்சள் அலர்ட்” கொடுக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் தெரிவித்துள்ளனர்.கடலின் சீற்றம் அதிகம் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.