அதிக கார்களை பயன்படுத்தும் பட்டியலில் சென்னை 4வது இடத்தை பெற்றிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு எத்தனை கார்கள் ஓடுகிறதோ அதன் எண்ணிக்கையை கொண்டு கார்களின் அடத்தி கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கில் மும்பை - 510 கார்கள், புனே - 359 கார்கள், கொல்கத்தா - 319 கார்கள், சென்னை - 297 கார்கள், பெங்களூரூ - 149 கார்கள், டெல்லி - 108 கார்கள் இருக்கின்றன. அப்படியென்றால் சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களில் கார்களின் போக்குவரத்து நெருக்கடி மற்ற நகரங்களை காட்டிலும் தற்போதைக்கு சற்று குறைவாக இருக்கும்.
அதே நேரம் இந்திய பெரு நகரங்களில் எங்கு அதிக கார்கள் விற்கப்பட்டிருக்கிறது என்ற கணக்கின் அடிப்படையில் பார்த்தால், அதில் மும்பை முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதன்படி மும்பை - 10.2 லட்சம் கார்கள், கொல்கத்தா - 5.91 லட்சம் கார்கள், பெங்களூரூ - 15.23 லட்சம் கார்கள், டெல்லி - 32.46 லட்சம் கார்கள் இருக்கிறது.
ஆனால் இந்தியாவிலேயே டெல்லியில் தான் மிகக் குறைவான கார்கள் ஓடுகின்றன. ஆனால் டெல்லி நகர வாசிகள் தான் அதிக கார்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். அதே போல் டெல்லிக்கு அடுத்து பெங்களூர் தான் குறைவான கார்கள் சாலையில் ஓடுகின்றன. ஆனால் மும்பை நகர வாசிகளை விட அதிக கார்களை வாங்கி வைத்திருப்பது பெங்களூரூதான். ஆக கார்கள் தேவைக்கு வாங்குவதை விட கவுரவத்திற்கு வாங்குவது இந்த காலத்தில் அதிகரித்திருக்கிறது என்பது ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. அதே நேரம் மற்றோரு தரப்பு கார்கள் இருந்தாலும் இணைப்பு போக்குவரத்து, பொதுபோக்குவரத்து மக்களின் பயணங்களுக்கு வசதியாக இருந்தால் மக்கள் அதனையே தெர்ந்தெடுப்பார்கள் என கூறுகின்றனர்.
-------