tamilnadu

img

ரயில்வே தனியார்மயம் சுய சரணாகதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - சிஐடியு கடும் எதிர்ப்பு

புதுதில்லி, ஜூலை 3- இந்திய ரயில்வேயைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவை, அதிலும் குறிப்பாக பயணிகள் ரயில்களைத் தனி யாரிடம் ஒப்படைக்கும் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் சிஐடியுவும் கண்டித்துள்ளன. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய ரயில்வேயை தனியாருக்குத் தாரை வார்த்திட, அதிலும் குறிப்பாக பயணிகள்  ரயில்களைத் தனியாரிடம் ஒப்படைத்திடும் மத்திய அரசின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கடு மையாக எதிர்க்கிறது. இவ்வாறு நடைபெறு வது, சுதந்திர இந்தியாவில் இதுதான் முதன்முறை. நூறாண்டுகளுக்கும் மேலாக நன்குக் கட்ட மைக்கப்பட்ட ரயில்வே உள்கட்டமைப்பு வசதி களை தனியார் கொள்ளை லாபம் ஈட்டு வதற்காக இப்போது திறந்து விடப்படுகிறது.

சுயசார்பு பொருளாதாரத்தை வீழ்த்தும்

நம் நாட்டை ஒற்றுமைப்படுத்துவதில் இந்திய ரயில்வே என்பது மிகவும் முக்கியமான வலைப் பின்னலாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இது, கோடானுகோடி மக்களுக்கு பொதுப் போக்குவரத்தை அளித்து வருகிறது. நாட்டின் கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரங்கள் ரயில்வேயைச் சார்ந்தே அமைந்திருக்கின்றன. இப்போது இதனைத் தனியாரிடம் தாரை வார்ப் பது, இந்தியாவின் சுய சார்பு பொருளாதாரத் தின் அடிப்படையையே அரித்து வீழ்த்திவிடும். இவ்வாறு தனியாரிடம் தாரை வார்ப்பது வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் என்று கூறப் படுவதற்கு முற்றிலும் முரணான முறையில், இத்தகைய செயல்கள் பெரிய அளவில் வேலை இழப்புகளையே கொண்டு வரும், இந்திய ரயில்வேயில் பணியாற்றிவரும் கோடானுகோடி ஊழியர்களை பாதுகாப்பற்றவர்களாக மாற்றிவிடும்.

பல நாடுகள் இவ்வாறு ரயில்வேயைத் தனியாரிடம் ஒப்படைத்தன் மூலம் அவை மக்க ளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமைகளை ஏற்படுத்தியதையும் அதனால் அந்த  நாட்டின் அரசுகள் கடும் அடிவாங்கிய அனுபவ ங்களிலிருந்தும், மத்திய அரசோ, பிரதமர் மோடியோ படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இந்திய ரயில்வே ஒரு பொதுப் போக்குவரத்து சேவையாகும். இது ஒன்றும்  லாபம் ஈட்டும் தொழில்பிரிவு அல்ல. இத்தகைய குணாம்சத்தை அரித்து வீழ்த்திட அனுமதிக்க முடியாது.

நாடும் நாட்டு மக்களும் கோவிட்-19 கொரோனா வைஸ் தொற்றுக்கு எதிராகக் கடும்  பாதிப்புக்கு உள்ளாகியிருக்கக்கூடிய நிலை யில், மத்திய அரசு இந்த முடிவினை எடுத்திருக் கிறது. உலக அளவிலும், நம் நாட்டிலும், சுகாதார வசதிகளைத் தனியாரிடம் தாரை வார்த்தத னால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது என்பது எந்த அளவிற்குப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை நன்றாகவே பார்த்துக் கொண்டிருக் கிறோம். சுகாதாரம், கல்வி, பொதுப் போக்கு வரத்து என்பவை அனைத்தும் பொது சேவைப் பணிகளாகும். இவற்றை வலுப்படுத்த வேண்டுமே தவிர, இவற்றைத் தனியாரிடம் தாரை வார்ப்பதன் மூலம் பலவீனப்படுத்தக் கூடாது. இந்த முடிவை மத்திய அரசாங்கம் ரத்து  செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிஐடியு கண்டனம்

இதேபோன்று சிஐடியுவும் மத்திய அரசின் முடிவைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது. இது தொடர்பாக பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: இந்தியாவில் ரயில்வேயில் பயணிகள் ரயில்களைத் தங்கள் வசம் எடுத்துக்கொள் வதற்காக ஐந்து உள்நாட்டு மற்றும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதைக் கடுமையாகக் கண்டிக் கிறோம். மோடி அரசாங்கத்தின் இந்த தேச  விரோத நடவடிக்கையை சிஐடியுகண்டிக்கிறது. இவ்வாறு தேசவிரோதக் கொள்கையை எடுப்பதற்கு இந்த அரசாங்கம் சமூக முடக்கக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது திகைக்க வைக்கிறது.

இவ்வாறு தனியாரிடம் ஒப்படைக்கப்படும் 109 அதிவேக ரயில்களில் ஓட்டுநரும், கார்டு களும் மட்டுமே ரயில்வே  ஊழியர்கள். இதர ஊழியர்கள் அனைவரும் தனியார் கட்டுப்பா ட்டில் வருகிறார்கள். இவர்கள்தான் பயணி களின் பாதுகாப்புக்கு பொறுப்பு எடுத்துக் கொள்ள இருக்கிறார்கள். தனியாரின் நோக்கம், கொள்ளை லாபம்  ஈட்டுவது என்பதேயாகும். இவர்கள் மக்க ளுக்குக் குறைந்த போக்குவரத்துக் கட்டண த்தில் டிக்கெட்டுகளை அளிக்க மாட்டார்கள். எனவே ரயில் கட்டணங்கள் மக்களால் எடுக்க முடியாத அளவிற்கு உயர்த்தப்படும். மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்திட ஒட்டுமொத்த தொழிற் சங்க இயக்கமும், தொழி லாளர் வர்க்கமும் முன்வர வேண்டும் என்று சிஐடியு அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

(ந.நி.)