மும்பை:
மும்பை பங்குச் சந்தையான ‘சென்செக்ஸ்’ ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. 36 ஆயிரத்து 500 முதல் 39 ஆயிரம் புள்ளிகளுக்கு உள்ளேயே நீண்டநாட்களாக வர்த்தகமாகி வரும் மும்பை பங்குச் சந்தை, கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி, 36 ஆயிரத்து 213 புள்ளிகளுக்கு சரிவைச் சந்தித்தது.இந்நிலையில், வார வர்த்தகத்தின்இரண்டாவது நாளான செவ்வாயன்றுமும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையான நிப்டி ஆகிய இரண்டுமே பலத்தஅடி வாங்கியிருக்கின்றன.காலையில் வர்த்தகம் துவங்கும் போதே, சென்செக்ஸ் சுமாராக 450 புள்ளிகள் சரிந்து, முதலீட்டாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த அதிர்ச்சி வர்த்தக நேரம் முடியும் வரை தொடர்ந்தது. காலையில் 36 ஆயிரத்து 879 புள்ளிகளில் இருந்தவர்த்தகம், வர்த்தக நேர முடிவில் 769.88 புள்ளிகள் சரிந்து, 36 ஆயிரத்து562.91 புள்ளிகளுக்கு வீழ்ச்சியடைந்தது.காலையில் சுமார் 145 புள்ளிகள் சரிவுடன் 10 ஆயிரத்து 878 புள்ளிகளில் தேசிய பங்குச் சந்தை வர்த்தகம் துவங்கியது. வர்த்தக நேர முடிவில், மேலும் 75 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 797 புள்ளிகளுக்கு இறங்கியது.குறிப்பாக, வங்கிகள், ஆட்டோமொபைல் துறைகள் அதிக சரிவை சந்தித்தன. டாடா மோட்டார், ஐசிஐசிஐ, எச்டிஎப்சி வங்கிகள், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் ஆகிய நிறுவனங்களும் அதிக இழப்பை சந்தித்துள்ளன.வங்கிச் சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கிகளை இணைத்ததே, பங்குச்சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தத்துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் சந்தை வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.