tamilnadu

img

ரிலையன்ஸ் குழும கடன் தொகை உரிய காலத்தில் செலுத்தப்படும் - அனில் அம்பானி

ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் கடன்களை குறித்த காலத்திற்குள் செலுத்தப்படும் என்று அதன் தலைவர் அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ரிலையன்ஸ் இன்ஃபிரா, ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் பவர் ஆகியவற்றின் பங்குகள், கடந்த சில வாரங்களில் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அனில் அம்பானி, கடந்த 14 மாதங்களில் அசல் மற்றும் வட்டி தொகை என 35,000 கோடி ரூபாயை, கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு செலுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "நிதி நிறுவனங்களில் இருந்து நிதி வழங்கும் நிலை மிக மோசமாக இருந்தாலும் கூட, ரிலையன்ஸ் குழுமம் இதுவரை அசல் தொகையில் ரூ.24,800 கோடியும், வட்டியாக 10,600 கோடி ரூபாயும் செலுத்தி உள்ளது. 

கடந்த சில வாரங்களாக ரிலையன்ஸ் குழும நிறுவனத்தின் பங்குகள் பற்றிய தேவையில்லாத வதந்திகள் பரவி வருகிறது. அதோடு மோசமான யூகங்களும் நிலவி வருகிறது. எதிர்கால கடமைகளை நிறைவேற்றுவதற்காக, கடனை கட்டுவதற்காக பல திட்டங்கள் தீட்டியுள்ளதாகவும், இதன் மூலம் முதலீட்டாளர்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சில வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்காததால், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு 30,000 கோடி ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் அனில் அம்பானி கூறியுள்ளார்.