tamilnadu

img

வங்கிகளில் ரூ.5 ஆயிரம் கோடி கடன்வாங்கி விட்டு மோசடி....

புதுதில்லி:
இந்தியாவின் பெரும் பணக்காரர் களில் ஒருவரான அனில் அம்பானி, சீனாவின் மூன்று வங்கிகளில் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது.கடந்த 2012ஆம் ஆண்டில் அனில்அம்பானிக்குச் சொந்தமான “ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்” நிறுவனம் சீனாவின் மூன்று வங்கிகளிடம் 700 மில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது. ஆனால், அதனைத் திருப்பிச்செலுத்தவில்லை. பலமுறை எச்சரித் தும் வங்கிகளுக் கடன் வந்து சேரவில்லை.

இதையடுத்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய, ‘இண்டஸ்ட்ரியல் & கமர்ஷியல் பாங்க் ஆப் சீனா’, ‘சீனா டெவலெப்மெண்ட் பாங்க்’ மற்றும் ‘எக்ஸிம் பாங்க் ஆப் சீனா’ ஆகிய மூன்று வங்கிகளும் அனில் அம்பானி மீது வழக்குத் தொடர்ந்தன. அண்மையில் இந்த வழக்குகள், இங்கிலாந்து நாட்டின் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், “அனில் அம்பானி அளித்த உத்தரவாதத்தின்படி, அவர் கடனை வட்டியோடு செலுத்தியே ஆகவேண்டும்” என்று நீதிபதி நீகல் தீர்ப்பளித்துள்ளார். இவ்விஷயத்தில் 21 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ள நீதிபதி, அம்பானி தனது கடனை வட்டியோடு சேர்த்து, 717 மில்லியன் டாலராக செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.5 ஆயிரத்து 446 கோடியாகும். 

விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள் இந்தியாவிற்குத்தான் டிமிக்கி கொடுத்தார்கள் என்றால், அனில் அம்பானியோ சீன வங்கிகளுக்கே டிமிக்கி கொடுத்திருக்கிறார்.