கிழக்காசிய நாடான தாய்லாந்தில் சர்வதேச தாய்லாந்து குத்துச் சண்டை போட்டிகள் நடைபெற்று வரு கிறது. ஜூலை 27ஆம் தேதி வரை நடை பெறும் இந்த தொடரில் ஐந்து பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் என இந்தியா சார்பில் மொத்தம் 11 பேர் பங்கேற்றுள்ள னர். தற்போது நாக் அவுட் சுற்று நிறைவு பெற்ற நிலையில் ஆடவர் பிரிவில் தீபக் (49 கிலோ), ஆஷிச் குமார் (75 கிலோ), பிரிஜேஷ் யாதவ் (48 கிலோ) ஆகியோரும் மகளிர் பிரிவில் பக்யபதி கச்சாரி (75), மனிஷா மவுன் (57 கிலோ) நிகாத் ஷரின் (51 கிலோ), மஞ்சு ராணி (48 கிலோ) என மொத்தம் 7 பேர் காலிறுதிக்கு முன்னேறி யுள்ளனர்.