games

img

இந்திய வீரர்கள் இல்லாத கனவு அணி - ரசிகர்கள் அதிர்ச்சி 

ஐசிசி டி20 உலகக் கோப்பை கனவு அணியில் இந்திய விரர்கள் ஒருவரும் இடம் பெறாதது ரசிகர்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.  

டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று, சூப்பர்-12 சுற்று, அரையிறுதி ஆட்டங்கள் முடிந்து நேற்றுடன் உலகக் கோப்பை முடிவுக்கு வந்தநிலையில், துபாயில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற பைனலில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இறுதியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டி சென்றது. டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் சாம்பியன் பட்டமாகும். 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களைத் தெரிவு செய்து கனவு அணியின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் யாரும் தேர்வாகாதது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாததாலும், இந்திய அணியை விடவும் இதர அணி வீரர்கள் சிறப்பாக விளையாடியதாலும் ஐசிசி அணியில் எந்தவொரு இந்திய வீரரும் இடம்பெறவில்லை. 

இந்த கனவு அணியில் டேவிட் வார்னர், ஜாஸ் பட்லர், பாபர் ஆஸம், சரித் அசலங்கா, மார்க்ரம், மொயீன் அலி, ஹசரங்கா, ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், டிரெண்ட் போல்ட், அன்ரிச் நோர்கியா, ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.