tamilnadu

img

நிலத்தடி நீரை மாசாக்கும் தொழிற்சாலைகள் ஆழ்ந்த மஞ்சளிலிருந்து பச்சையாக மாறும் குடிநீர் - கண்டுகொள்ளாத அரசு

தொழில் நகரமானான கோவையில் இயங்கி வரும் எண்ணற்ற சிறு, குறு தொழிற்சாலைகளில் நிக்கல் மற்றும் குரோமியம் தயாரிக்கும் நிறுவனங் களும் அடங்கும். பொதுவாகவே  நிக்கல் மற்றும் அதனை சுத்திகரிக்கும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவோ ருக்கு மூச்சுக்குழாய் அழற்சி, நுரை யீரல் செயல்பாடு குறைதல், நுரை யீரல் மற்றும் நாசி சைனஸில் புற்று நோய் போன்ற மிக மோசமான தீங்குகள் விளையும். எனவே தான்  பாதுகாப்பான முன்னெச்சரிக்கை யுடன் பணிபுரிய தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வருவர். பிரச்சனை இவ்வாறு இருக்கையில், அதன் கழிவுகளை முறையாக சீர்படுத்தவில்லையெனில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர் களைத் தாண்டி அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் பாதிப்பு களை ஏற்படுத்தும். தொழில் நகரமான கோவையில் இது சற்று பரவலாகவே உள்ளது. அவ்வாறு கோவையின் ஒரு பகுதியில் சுத்திகரிக்கப்படாத குடிநீரால் அவதியுறும் மக்களை சந்தித்தபோது..

கோவை சரவணம்பட்டியைத் தாண்டியுள்ள குரும்பபாளையம் பகுதி  முன்னர் வேளாண் நிலங்களாகவும், தோட்டங்களாகவும் இருந்த பகுதி. தற்போது சில காலமாக சிறு,குறு தொழிற்சாலைகளால் நிறைந்து வருகிறது. இத்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்படாததால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படு வதோடு மேலும் பல சிரமங்கள் தொடர்ந்து நேர்ந்து வருகிறது. அவ் வாறு அப்பகுதியில் அமைந்துள்ள எலக்ட்ரோ பிளேட்டிங் தொழிற் சாலையால் அதைச்சுற்றி அமைந் துள்ள குடியிருப்புப் பகுதியில் குடிநீர் மிகவும் ஆழ்ந்த மஞ்சள் நிறத்திலும், பச்சை நிறத்திலும் காட்சியளிக்கிறது. மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள இடங்கள் யாவும் வேளாண் நிலங் களாகவும், தோட்டங்களாகவும் இருப் பதாலும், கால்நடைகள் அதிகம் அந் நீரைச் சார்ந்து இருக்க வேண்டிய தாலும் அப்பகுதி மக்கள் கலக்கத் துடனேயே உள்ளனர். இதுகுறித்து தொழிற்சாலைக்கு அருகேயுள்ள குடியிருப்புக் கட் டிடத்தின் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், இந்நீரை ஒரு பத்து நாள் தொடர்ந்து போர் போட்டு பயன் படுத்தினால் நிச்சயம் உடல்நலம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். மேலும், இப்பகுதி தற்போது தொழிற் பகுதியாக மாறிவருவதால் நிறைய  குரோமியம் பூச்சு மற்றும் எலக்ட்ரோ பிளேட்டிங் நிறுவனங்கள் அதிகம் வந்து  விட்டன.

இதனால் இப்பிரச்சினை மேலும் அதிகரித்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், அருகிலுள்ள ஒரு சிறு நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்  ஊழியர் கூறுகையில், நான் புதிதாக இங்கு பணிபுரிய வந்தபோது உப யோகத்திற்கு உள்ள நீரைக் கண்டு, யாரோ உபயோகித்தது இன்னமும் சுத்தப்படுத்தாமல் உள்ளதோ என  நினைத்தேன். ஆனால் அதைத்தான் பயன்படுத்தியாக வேண்டுமெனத் தெரிந்தபோது மிகவும் அதிர்ச்சிக் குள்ளானேன். அந்நீர் ஆழ்ந்த மஞ்சள் நிறத்தில் அவ்வளவு அசுத்தமாக இருந் தது. எட்டிப்பார்க்கும் தூரத்தில் அத்தொழிற்சாலை உள்ளதால் அதன் நெடியும் அதனால் விளையும் குடிநீர் பாதிப்பும் எங்களை இருக்க விடாமல் செய்கிறது, என வேதனையுடன் கூறுகிறார். மேலும், கால்நடைகளை வைத்து தென்னைகள் வளர்த்து வரும் அப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த ஒரு வருடமாகத் தான் நீர் இவ்வாறு இருக்கிறது. தொழிற்சாலைகள் இங்கு பரவலாகும் வரை இப்பிரச்சனை இருந்ததில்லை.

என்னென்ன கம்பெனிகள் வந்ததோ எனக்குத் தெரியாது, ஆனால்  அத னால் தான் நல்ல நீர், மஞ்சள் நிறத் தில் வந்து தற்போது பச்சை நிறத்தில்  வருகிறது. நாங்கள் குடிப்பதற்கு அத்திக்கடவு நீரைப் பயன்ப டுத்துகிறோம். ஆனால் கால்நடை களுக்கும், தென்னைகளுக்கும் அந் நீரைத் தான் பயன்படுத்தி வரு கிறோம். இதனால் பிஞ்சு தென்னைக் குருத்துகள் இளமையிலேயே விழுந்து  விடுகின்றன. புகார் கொடுக்கப் பட்டாலும் நடவடிக்கை எடுக்கப் போவ தில்லை என எங்களுக்கே தெரியும், எனவே நாங்கள் எதையும் செய் யாமல் வாழ்ந்து வருகிறோம், என விரக் தியடைகிறார் அவர். அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசி கூறுகையில், போர் போட்டு நீர்  எடுத்தால் பச்சை நிறத்தில்  எங்களுக்கு நீர் வருகிறது. அதனை பாத்திரத்தில் காயவைத்துச் சுரண்டினால் பச்சை நிறம் கையோடு வரும். என் மேல் வீட்டை வாடகைக்கு விட்டால் காசு கிடைக்கும் தான், ஆனால் இந்த  நீரை வைத்து யார் இங்கு வாடகைக்கு வருவர்? நாங்கள் கூட ஏதேனும்  செய்து கொள்ளலாம், ஆனால் கிணற்றி லிருந்து நீர் எடுத்து கால்நடைகளுக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்தும் விவசாயிகளின் பாடு திண்டாட்டமே. இதனாலேயே நூறு தென்னை காய்க்க வேண்டிய இடத்தில் பத்தும், இரு பதுமாக காய்க்கிறது.

பக்கத்தில் ஒரு வர் இந்நீரை ஆய்வு செய்வதற்காக எடுத்துச் சென்றும் நல்ல நீர் என தான் முடிவு வந்தது. ஆனால் தற்போதும் இந்நீர் இப்படித்தான் உள்ளது. ஆக நாங்கள் அம்முடிவையும் நம்ப வில்லை, இதற்காக எதுவும் செய்யவு மில்லை. எங்கள் பாடென நினைத்து வாழ்ந்து வருகிறோம். அரசாங்க இன்ஸ்பென்சனுக்காக புகார் கொடுக் கப்பட்டாலும் இவர்களுக்கு முன்ன மேயே தகவல் வந்து விடுவதால் பலமுறை தப்பித்து வந்திருப்பதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். சட்டப்பூர் ்வமாகச் சென்று போராடக் கூடிய அளவுக்கெல்லாம் தைரியமும் நம் ம்பிக்கையும்  இம்மக்களுக்கோ, விவ சாயிகளுக்கோ இல்லை. நூறு சதம் அரசு தான் இதற்கு தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும். குறைந்த பட்சம் இந்நிறுவனங்களுக்கு இது குறித்து ஒரு நோட்டிஸாவது அனுப்ப  வேண்டும், இவ்வாறு அவர் கூறுகி றார். இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளை நாம் தொடர்பு கொண்டு பேசுகையில் உரிய பதில ளிக்க மறுத்து விட்டனர்.   எலக்ட்ரோபிளேட்டிங் என்பது அடிப்படையில் உலோகத்தின் அரிப் பைத் தடுக்க அல்லது அலங்கார நோக் கங்களுக்காக நீராற்பகுப்பு மூலம் ஒரு  உலோகத்தை மற்றொன்று மீது பூசும்  செயல்முறையாகும். இது தொழில் நோக்கங்களுக்காக பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தொழில்சார்  பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகத் தின் அறிக்கையின்படி (ஓ.எஸ்.ஹெச். ஏ), எலக்ட்ரோபிளேட்டிங் செய்யும் தொழிலாளர்கள் ஹெக்ஸாவேர் குரோமிய உள்ளீட்டிற்கு ஆளாவதா கவும் இதனால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  மேலும், இத்தொழிற்சாலையால் சயனைடு, நிக்கல் மற்றும் குரோமி யம் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கன  உலோகங்கள் உருவாகி, இம்மாசு பாடுகள் பின்னர் மண்ணில் ஆழமாக வெளியேறி நிலத்தடி நீரை வெகுவாக பாதிக்கும் தன்மையுடையது. இத னால் நிலத்தடி நீரை நம்பி வாழும் மக்க ளுக்கும் வேளாண் சார் உபயோகத் திற்கும் பல தீங்குகளை உருவாக்கும். இவ்வகையில் இப்பகுதி மக்கள் பல காலமாகக் கடும் அவதியுற்று வருகின்ற னர். தொழிற்சாலைகள் தற்போது அமைந்திருக்கும் இடங்களில் வசிக் கும் மக்கள் அடித்தட்டு சாமானிய மக் கள் என்பதால் அவர்களின் பாதிப்பு கள் குறித்து சரியாக கண்டுகொள்ளப் படுவதில்லை. அதேநேரம், அரசிடம் சென்று கேட்டால் மட்டும் என்ன ஆகி விடப் போகிறது என்னும் எண்ணம் மன தில் வேரூன்றி சூழலுக்கே வாழப் பழகிக்கொண்ட மக்கள் எதையும் சகித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

-ச.காவியா.