நாக்பூர்:
சமஸ்கிருதம் பேசினால் உடலில் இருக்கும் கொழுப்பு, சர்க்கரை குறையும் என்று நாடாளுமன்றத்தில் கொஞ்சமும் கூச்சப்படாமல் பேசியவர் பாஜகஎம்.பி. கணேஷ் சிங். சமஸ்கிருதத்தில் கம்ப்யூட்டரை புரோகிராமிங் செய்தால், வைரஸ் கூட தாக்காது என்ற அளவிற்கு இவரின் ‘கண்டுபிடிப்பு’ இருந்தது.இந்நிலையில், கணேஷ் சிங்எம்.பி.க்கு, மகாராஷ்டிர மாநிலஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிபோட்டியாக உருவெடுத்துள்ளார்.நாக்பூர் பல்கலைக்கழக விழாவில் பேசியிருக்கும் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, “சமஸ்கிருத சுலோகங்களைச் சொன்னால் பாலியல் வன்கொடுமைகள் குறையும்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.மேலும், “ஒரு காலத்தில் வீடுகளில் எல்லாம் கன்னி பூஜை நடத்தப்படும்; ஆனால் இப்போதெல் லாம் அது நடப்பதில்லை” என்று வருத்தப்பட்டுள்ள கோஷ்யாரி, “துஷ்டர்கள் (தீயவர்கள்) பெண்களைப் பாலியல் வன் கொடுமை செய்கிறார்கள், கொல்கிறார்கள்” என்றும், “மாணவர்களுக்குச் சமஸ்கிருத சுலோகங்களைக் கற்பித்தால், இதுபோன்ற பாலியல் வன் கொடுமைகளே நடக்காது” என்றும் கண்டறிந்துள்ளார்.