பாட்னா, ஏப். 3 - காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளில் செய்யாத சாதனைகளை, கடந்த 5 ஆண்டுகளில் சாதித்து இருப்பதாக, பிரதமர் மோடி அண்மைக்காலம் வரையிலும் கூறிவந்தார். ஆனால், தற்போது திடீரென அதிலிருந்து பின்வாங்கியுள்ளார்.2014-இல் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள அவர், 5 ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.பீகார் மாநிலம் ஜமுய் மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போதுதான் மோடி, இவ்வாறு ஜகா வாங்கியுள்ளார்.“70 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தது. அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டதாக அவர்களால் கூற முடியவில்லை. எங்கள் அரசுவெறும் 5 வருடங்கள்தான் ஆட்சியில்உள்ளது. பிறகு எப்படி முழு வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியும்?” என்று அப்பாவி போல கேட் டுள்ளார்.மோடி அவரது 28 நிமிட தேர்தல்பிரச்சார உரையில், 23 முறை‘சவுகிதார்’ என்ற வார்த்தையையும், 15 முறை காங்கிரஸ் என்ற வார்த்தையையும், 14 முறை ராணுவத்தினரின் பெயரையும் குறிப்பிட் டதாக செய்தி வெளியிட்டிருக்கும் ஊடகங்கள், வேலைவாய்ப்பு குறித்து ஒருவார்த்தை கூட மோடி வாயிலிருந்து வரவில்லை என்றும் தெரிவித்துள்ளன.