மின் ஊழியர் மத்திய அமைப்பு பொன்விழாவில் தலைவர்கள் பேச்சு
சென்னை, நவ. 15- தொழிற்சங்க போராட்டத்தோடு உள்ளூர் மக்களையும் திரட்ட வேண்டும் என்று மத்திய ஊழியர் மத்திய அமைப்பு பொன்விழாவில் தலைவர்கள் அறிவுறுத்தினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு 1970 ஆம் ஆண்டு நவ.14 ஆம் தேதி அன்று மதுரையில் தொடங்கப் பட்டது. கடந்த 50 ஆண்டுகாலத்தில் ஏராளமான தாக்குதலையும், பழி வாங்கலையும் சந்தித்த தொழிற்சங் கம், நெருப்பாற்றை நீந்தி தியாக வர லாற்றை தாங்கி நிற்கிறது. இந்த பொன்விழா துவக்க நிகழ்வு வியாழனன்று (நவ.14) சென்னையில் தொடங்கியது. மின்கம்பிகள் சென்ற இடமெல்லாம் தொழிற்சங்கத்தை கட்டியமைத்து, பாதுகாத்து, வீரிய மிக்க அமைப்பாக வழி நடத்திய முன் னோடிகளையும் அவர்களின் தியாகங் களையும் தலைவர்கள் நினைவு கூர்ந்தனர்.
பலவீனங்களை களைவோம்
இந்நிகழ்வில் பேசிய சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகு மாறன், “மத்திய அமைப்பின் வளர்ச்சி, அதுபுரிந்த சாதனைகளால் தொழிலா ளர்களின் வாழ்க்கையில் பெரும் மாற் றம் வந்துள்ளது. அது சிந்தனையி லும், உணர்விலும் பிரதிபலிக்கிறது. பிரச்சனை இல்லாமல் பிரச்சனையை முடிக்க வேண்டும் என்ற தொழிலாளர் களின் எதிர்பார்ப்பை, பலவீனங்களை களைய வேண்டும்” என்றார். “சிஐடியு-வில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு அமைப்பும் தியாக வரலாறு கொண்டவை. சிஐடியு என் றாலே அது தியாக வரலாறு கொண்டது தான். அதனால் இன்றும் சிஐடியு உயிர்ப்போடு இருக்கிறது. பொருளா தார கோரிக்கைக்காக போராடிக் கொண்டிருந்தோம். புதிய பொருளா தார கொள்கை வந்த பிறகு, பணி யாற்றும் நிறுவனத்தையும், தேசத்தை யும் பாதுகாக்க போராடிக் கொண்டி ருக்கிறோம். அதற்கேற்ப, தொழிற் சங்க ஊழியர்கள் கூடுதலாக பணி யாற்ற வேண்டும். தொழிற்சங்க ஊழி யர்கள், உறுப்பினர்களை மக்களும், நிர்வாகமும் மதிக்க வேண்டும். அதற் கேற்ப நமது பணிகள் அமைய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
உள்ளூர் மக்களை திரட்டுங்கள்
மத்திய அமைப்பின் முன்னாள் பொருளாளரும், மூத்த தொழிற்சங்கத் தலைவருமான வே. மீனாட்சிசுந்த ரம் குறிப்பிடுகையில், “தொழிற்சங்கத் தால்தான் நான் மனிதனாக இருக்கி றேன். தலைமறைவு காலத்தில் மின்சார தொழிலாளர்களும், போக்கு வரத்து தொழிலாளர்களும்தான் என் உயிரை காப்பாற்றினார்கள். இந்த தொழிலாளர்கள் இல்லாவிடில், என்கவுண்டரில் என்னை கொன்றி ருப்பார்கள்” என்று நெகிழ்ச்சியோடு கூறினார். “சிக்கன சீரமைப்பு என்ற பெயரில் ஊழியர்களின் பணப் பயன்களை பறிக்கின்றனர். வேலைநிறுத்தத்தை தடுக்கிறார்கள். 48 மணி நேரம் வேலை என்பதை 36 மணி நேரமாக மாற்றி, மணி நேர, நிமிட நேர ஊதியம் தரும் நடைமுறை வந்துள்ளது. அனைத்து தொழில்களிலும் தினக்கூலி, அவுட்சோர்சிங் முறை புகுந்துவிட்டது. எனவே, அதிகாரத்தை கைப்பற்ற செயலாற்ற வேண்டும்” என்றார். “தொழிற்சங்க ஆளுகைக்குள் மக்களை கொண்டு வராவிடில் விவ சாயிகளும், தொழிலாளர்களும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருப் பார்கள். தொழிற்சங்க போராட்டத் தோடு, மக்களை திரட்ட வேண்டும். அரசியல் ரீதியாக சிந்தியுங்கள், உல களவில் சிந்தியுங்கள், உள்ளூர் மக் களை திரட்டுங்கள்” என்றும் மீனாட்சி சுந்தரம் கூறினார்.
வர்க்க ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்போம்
முன்னதாக நிகழ்வுக்கு தலைமை தாங்கி பேசிய மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்தி ரன், “சம்பள வெட்டு, ஊக்கத் தொகை பறிப்பு, பதவி உயர்வு தவிர்ப்பு போன்று எந்தவிதமான இழப்பையும் சந்திக்காமல் நாம் இருப்பதற்கு, நமது தொழிற்சங்க முன்னோடிகள் அனு பவித்த துயரங்களும், தியாகங்க ளும்தான் காரணம். முந்தைய தலை முறையின் வரலாற்றையும், போராட்டத்தையும், தத்துவத்தையும் உணர்ந்து வர்க்க ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்போம்.” என்றார். “பொன்விழா ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் மத்திய அமைப்பின் வளர்ச்சிக்கு பாடுபட்ட முன்னோ டிகள் அனைவரையும் கவுரவிப்போம். அவர்களின் போராட்ட பாரம்பரி யத்தைத் தொடர்வோம்” என்றார். இந்நிகழ்வுக்கு மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். அமைப்பின் முன்னாள் தலைவர்கள் எஸ்.விஜயன், எஸ்.எஸ்.சுப்பிரமணி யம் உள்ளிட்டோர் பேசினர். மாநிலப் பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.