மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவ இடத்தை புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் சி.பெருமாள், தாலுகா செயலாளர் சீராஜூதீன் உள்ளிட்டோர் உள்ளனர்.