tamilnadu

img

பழங்குடி மக்களுக்கு நிவாரணம்

திருவண்ணாமலை, ஏப். 27- தமிழகத்தில் கொரோனா தாக்குதலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. திரு வண்ணாமலை நகரத்தில் மலையடிவார பகுதிகளில் பழங்குடி இருளர் இனமக்கள் நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்ற னர். இவர்களில் பெரும்பான்மை யினர் தினசரி  கூலி வேலை செய்து, அந்த கூலியின் மூலம்  வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கூலி வேலைக்கு செல்லமுடியாததால், உண விற்கு வழியில்லாமல் தவித்து வந்தனர்.

இதையடுத்து, ஞாயிறு அன்று (ஏப்.26) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும்,  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி  நிர்வாகிகளும் இணைந்து,  திருவண்ணா மலை மலை அடிவாரத்தில் (சக்தி திரை யரங்கம் பின் புறம்) உள்ள இருளர் சமூக மக்க ளுக்கு,  உணவுக்கான நிவாரணப் பொருட் களை வழங்கினார்.  மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன் எம்.பிரகலாதன்,எஸ். ராமதாஸ் நகரச் செயலாளர் எம். ரவி.நிர்வாகிகள் கே.நீதிமாணிக்கம், இ.தங்கமணி, சரவணன், எஸ்.பலராமன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அந்தோணி ராஜ்,வட்டாரச் செயலாளர் புகழேந்தி, வட்டார பொருளாளர் பெலிக்ஸ் விஜயன். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.