அதிமுக மீது மாநில தேர்தல் ஆணையத்திடம் திமுக புகார்
சென்னை, ஜன.11- மறைமுகத் தேர்தலில் அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக திமுக வினர் மாநில தேர்தல் ஆணையத்தி டம் புகார் அளித்துள்ளனர். 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலை வர், ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலை வர் ஆகிய 5 பதவிகளுக்கான மறை முக தேர்தல் ஜனவரி 11 அன்று நடை பெற்றது. இதில் தலைவர் யார் என்பதை நிர்ணயிப்பதில் சுயேட்சை உறுப்பினர்களின் பங்கு முக்கிய மாக இருந்தது. இந்த நிலையில் மறைமுகத் தேர்தலில் அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் திமுக வெற்றி பெறும் இடங்களில் பிரச்சனை செய்து தேர்தல் நிறுத்தப்படுகிறது. பல இடங்களில் தேர்தல் அலு வலர்கள் வரவில்லை என்று கூறி திமுகவினர் மாநில தேர்தல் ஆணை யத்திடம் புகார் அளித்துள்ளனர். திமுக சார்பில் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆலந்தூர் பாரதி ஆகியோர் இந்த புகார் மனு வை அளித்தனர்.
ஊரக பகுதிகள் இல்லாத சென்னை மாவட்டம், புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் உருவாக்கப் பட்ட ஒன்பது மாவட்டங்கள் தவிர பிற 27 மாவட்டங்களின் ஊரக உள் ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்தது. ஆளும் கட்சியான அ.தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் மாவட்ட வார்டு கவுன்சிலர்க ளுக்கான பதவியிடங்களில் 242 இடங்களையும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 2195 இடங்க ளையும் பிடித்தன. எதிர்க்கட்சியான தி.மு.க. கூட் டணி மாவட்ட வார்டு கவுன்சிலர் இடங்களில் 270 இடங்களையும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இடங்க ளில் 2,362 இடங்களையும் கைப்பற்றி யது. சதவீத அடிப்படையிலும் தி.மு.க. கூட்டணி அதிக வாக்கு களைப் பெற்றிருந்தது. மாவட்ட வார்டு கவுன்சில ருக்கான வாக்குகளில் 47.18 சதவீத வாக்குகளை தி.மு.க பெற்றது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை 41.55 சதவீத வாக்குகளையே பெற் றது. ஊராட்சி ஒன்றிய உறுப்பின ருக்கான தேர்தலில் அ.தி.மு.க. 34.99 சதவீத வாக்குகளையே பெற்ற நிலை யில், தி.மு.க. 41.24 சதவீத வாக்கு களைப் பெற்றிருக்கிறது.
அதிமுக 14, திமுக 12 இடங்களில் வெற்றி
தமிழகத்தில் 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் ஜனவரி 11 சனிக்கிழமை அன்று நடை பெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் அதிமுகவும், திமுக வும் சமமான உறுப்பினர்களை கொண்டிருந்ததால், தேர்தல் நடத்தப் படவில்லை. எனவே சிவகங்கை தவிர்த்த மற்ற 26 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அதிமுக கூட்டணி 14 மாவட்ட ஊராட்சி தலை வர் பதவிகளையும், திமுக 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி களையும் கைப்பற்றின. கோவை, தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், புதுக் கோட்டை, தூத்துக்குடி, விருதுநகர், அரியலூர் ஆகிய மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை அதி முக கைப்பற்றியது. அதிமுக கூட்ட ணியிலிருக்கும் பாமக, சேலம் மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்த லில் வெற்றி பெற்றது. மதுரை, நீலகிரி, திண்டுக்கல், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திரு வண்ணாமலை, திருவள்ளூர், ராம நாதபுரம், திருச்சி ஆகிய 12 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை திமுக வென்றுள்ளது.
புதுக்கோட்டையில் திமுக 11 கவுன்சிலர் இடங்களிலும் காங்கி ரஸ் 2 இடங்களிலும் வென்றிருந்தது. அதிமுக 8 இடங்களிலும், தமாகா 1 இடத்திலும் வென்றிருந்தது. திமுக மட்டுமே 11 உறுப்பினர்களைக் கொண்டிருந்தும் 10 வாக்குகள் மட்டும் பெற்று திமுக வேட்பாளர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி களுக்கான தேர்தலில் அதிமுக 150 இடங்களையும், திமுக 135 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
வாக்குப் பெட்டியை தூக்கிச் சென்ற அதிமுக
கோபிசெட்டிபாளையம் அருகே தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில், தேர்தல் நடைபெறும் முன்பே வாக்குப் பெட்டியை அதி முக உறுப்பினர் தூக்கிச்சென்றதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் அருகே உள்ள தூக்க நாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 10 வார்டுகளில் திமுக கூட்டணி 7, அதிமுக 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. ஒன்றியக்குழு அலுவலகத்திற்கு 10 உறுப்பினர்களும் சனிக்கிழமை காலை வந்தனர். அப்போது, அதிமுக வைச் சோ்ந்த 1ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் நடராஜ் திடீரென வாக்குப் பெட்டியை தூக்கிச் சென்றுவிட்டார். இதனைக் கண்டித்து திமுக உறுப்பினார்கள் 7 பேரும் ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமா்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே வாக்குப் பெட்டி யை உறுப்பினர் ஒருவர் தூக்கிச் சென்றதால் தேர்தல் ரத்து செய்யப் பட்டதாக தோ்தல் நடத்தும் அலு வலர் ரேணுகாதேவி அறிவித்து அறி விக்கையை ஒட்டினார்.