சென்னை:
பிரச்சாரத்துக்கு இடையூறு செய்வதாக தேர்தல் பறக்கும்படை மீது டி.ஆர். பாலு புகார் அளித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்துக்கு திமுக சார்பில் டி.ஆர்.பாலு அனுப்பியிருக்கும் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது தேர்தல் பறக்கும் படையினரால் முதலில் சென்னை லயோலா கல்லூரிக்கு எதிரிலும் மற்றும் மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட 150 ஆவது வார்டிலும் பொதுமக்கள் முன்னிலையில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.வாகனத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கான வாகன அடையாள அட்டை மற்றும் நட்சத்திர பேச்சாளருக்கான அடையாள அட்டை ஒட்டப்பட்டிருந்த போதிலும் வேண்டுமென்றே தமிழக தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு பின் செல்ல அனுமதி அளித்தனர்.இரண்டு இடங்களில் வாகன சோதனையிடப்பட்ட நிகழ்வு மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. இதனால் காலதாமதம் ஏற்பட்டதாகவும் அந்த புகாரில் கூறியுள்ளார்.