பெட்ரோல் டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், இன்சூரன்ஸ், எப்சி, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலை 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சார்பில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், படப்பை ஆகிய இடங்களில் உள்ள போக்குவரத்து ஆய்வாளர்கள் அலுவலுகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகிகள் டி.பாபு, ரமேஷ், குமார், சேஷாத்திரி, பகத்சிங்தாஸ் உள்ளிட்டோர் பேசினர்.