சென்னை,ஜூன் 21- மக்களை மேலும் அவதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து 15-வது நாளாக ஞாயிறன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்தைக் காரணம்காட்டி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து,விற்பனை செய்கின்றன. இந்நிலையில் 15வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.82.58-க்கும், டீசல் 51 காசுகள் உயர்ந்து ரூ.75.80-க்கும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகளும் மக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.