முதலமைச்சருக்கு மலைவாழ் மக்கள் சங்கம் கடிதம்
சென்னை, மே 13- தமிழகத்திலிருந்து அண்டைய மாநிலங்களுக்கு பிழைப்பிற்காக சென்ற மலைவாழ் -பழங்குடி மக்களை அவரவர் சொந்த கிராமங்களுக்கு கொண்டு வந்து சேர்க்க உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று முதல மைச்சருக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலை வர் பி. டில்லி பாபு, பொதுச் செயலாளர் சரவணன், பொருளாளர் பொன்னு சாமி ஆகியோர் முதலமைச்சருக்கு அனுப்பியிருக்கும் கடிதம் வருமாறு:
தமிழ்நாட்டில் வாழும் பழங்குடி யின மக்களில் 80 சதமான மக்கள் நில மற்ற கூலித் தொழிலாளிகளாவர். அவர்கள் வாழும் கிராம பகுதி களில் அன்றாடம் கூலி வேலை கிடைப்பதில்லை. எங்கு கிடைக்கிறதோ அங்கே வேலைத்தேடிச் சென்று பெரும் பகுதியினர் பிழைப்பை நடத்தி வருகின்றனர். பழங்குடி மக்கள் வாழும் மலைப் பகுதிகளில் அரசின் ரெவின்யூ புறம்போக்கு அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க 1989 ஆம் ஆண்டு தடையாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த பிரச்சனை குறித்து, சட்டப் பேரவையில் திமுக, அதிமுக ஆட்சி காலங்களில் அரசாணை எண்.1168 -ஐ ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
முந்தைய அதிமுக ஆட்சி யின்போது வருவாய் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அன்றைய சட்டமன்ற உறுப்பினரும் எங்கள் சங்கத்தின் தலைவருமான பி. டில்லிபாபு, மலை வாழ் மக்களின் பிரச்சனையை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இன்றைக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் அன்றைக்கு வரு வாய்த்துறை அமைச்சராக இருந்த போது இந்த பிரச்சனை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனாலும் இன்று வரைக்கும் இந்த அர சாணை ரத்து செய்யப்படவில்லை. இதனால், பல்லாயிரக் கணக்கான பழங்குடி மக்கள் தங்களது அனுபவ நிலங்களுக்கு பட்டா கிடைக்காமல் கிணற்று பாசனத்திற்கு மின் மோட்டார் பெற முடியாமல் மழையை நம்பியே விவசாயம் செய்துவரும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மறுபுறம், வன உரிமைச் சட்டம் 2006 இடதுசாரி கட்சிகளால் நாடாளு மன்றத்தில் போராடி பெறப்பட்டது. அச்சட்டம் தமிழ்நாட்டில் மட்டும் 10 ஆண்டுகள் வழக்கு என்ற பெயரில் கிடப்பில் போட்டுவிட்டது. இவ் வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு 2016 ஆம் ஆண்டு வழக்கை முடித்து வைத்து, அனுபவத்தில் உள்ள வன நிலங்களில் ஆதிவாசி பிற இன மக்க ளுக்கும் நில உரிமை வழங்க உத்தரவு பிறப்பித்தது.
இச்சட்டத்தின் படி தமிழ் நாட்டில் இதுவரை சுமார் 7600 மனுக்களை மட்டுமே ஏற்றுக் கொண்டு வன உரி மைச் சட்டத்தின் கீழ் பட்டா உரிமை சான்று வழங்கப்பட்டுள்ளது. இது வரை சுமார் 35,000க்கும் மேற்பட்ட மனுக்களை இன்னும் ஆய்வு செய்யப் படவில்லை. மேலும், பல்லாயிரக் கணக்கான மலைப்பகுதி பழங்குடிகளிடமிருந்து மனுக்கள் எதையும் பெறாமல் வனம் மற்றும் வருவாய்த்துறையினர் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். இத்தகைய சூழலில் முழுமை யான பாசனமும், பயிர் சாகுபடி செய்ய முடியாமல் அவ்வப்போது வனத்துறை யினரின் மிரட்டல்களால் பொய் வழக்கு, பணம் பறிப்பதாலும் அவர்க ளது 100 ஆண்டு கால அனுபவ வன நிலத்தின் வன உரிமைச் சட்டத்தின் படி உரிமை பெற முடியவில்லை. மேற்கண்ட இடர்பாடுகளால்
களையொட்டி வாழும் பழங்குடியின மக்கள் பிழைப்புக்காக அண்டைய மாநிலங்களுக்கு வேலை தேடி செல்கின்ற புலம் பெயர்ந்து செல்ல வேண்டிய அவல நிலை தான் இன்றைக்கும் தொடர்கிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வெள்ளிமலை, சேலம் கல்வராயன் மலை, பச்சமலை, ஏற்காடு, திரு வண்ணாமலை, ஜமனாமுத்தூர் மலை, ஜவ்வாதுமலை, ஈரோடு குத்தி யாலத்தூர், பர்கூர், தாளவாடிமலை, சித்தேரிமலை, திருப்பத்தூர் ஜவ்வாது மலை போன்ற மலைகளிலிருந்து சுமார் 35000க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் பெற்ற பிள்ளைகளை வய தான பெரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு கணவன், மனைவி இப்படி குடும்பம் குடும்பமாக மைசூர், பெங்க ளூர், கேரளா, ஆந்திரா போன்ற மாநி லங்களில் புலம் பெயர்ந்துள்ள கூலித் தொழிலாளர்களாக, உடல் உழைப்பை விற்று வாழ்ந்து வருகின்ற னர்.
பலநூறு மைல்களுக்கு அப்பால் சென்ற பழங்குடி மக்கள் பசி, பட்டினி யோடு மைசூரிலிருந்து நடந்தே வர ஆரம்பித்துள்ளனர். சொந்த மண்ணிலே அகதிகளாக, சாப்பாட் டிற்கே கையேந்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசின் உதவிகள் முழுமையாக சென்றடைய வில்லை. பிறந்த மண்ணில் வாழ்ந்தாலும் சரி- செத்து மடிந்தாலும் சரி என்று பலநாட்கள் பட்டினியோடு வாழ்க்கையை சுமந்தே நடந்து வர ஆரம்பித்து விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக் களை திருப்பி அனுப்புவதும், சில நூறு பேர்களை மட்டும் மண்ட பங்களில் அடைத்து வைத்துள்ளனர். உலகமே கொரோனா பாதிப்பில் லட்சக்கணக்கான மக்கள் பாதித்து வரும் இச்சூழலில் தமிழ்நாடு அரசு மலைவாழ் - பழங்குடியின மக்களை பாதுகாத்து அவரவர் சொந்த ஊர்க ளுக்கு திரும்ப அழைத்து வர முதல மைச்சர் உதவி செய்ய வேண்டும். இப்பிரச்சனையில் முதலமைச்சர் சிறப்பு தனி கவனம் செலுத்தி அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து, ரயில் போன்ற பயணத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு தெரிவித்திருக்கி றார்கள்.