districts

img

மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

 திருவள்ளூர், அக்18- திருத்தணி கோட்டாட்சியர் அலு வலகம் முன்பு இருளர் இன மக்க ளுக்கு குடிமனை பட்டா, தொகுப்பு  வீடுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திங்களன்று (அக் 17) காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. திருத்தணியை அடுத்த சூரிய நகரம் ஊராட்சியில் தெக்களூர் கிராமத்தில் 32  இருளர் இன குடும் பங்கள்,  கடந்த 50 வருடங்களாக வசித்து வருகின்றனர்.  இதில் 20 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா இல்லை. இதனால் தொகுப்பு வீடு கள் உள்ளிட்ட அடிப்படை தேவை கள் எதுவும் கிடைக்காமல் இன்றள வும் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் திங்களன்று (அக் 17)  மேற்கண்ட இருளர் இன மக்கள் திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் மேற்கொண்டனர்.அங்கேயே மதிய உணவு சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு தலைவர்களை அழைத்து பேசினர். திருத்தணி கோட்டாட்சியர்  சூரிய நகரத்தை சேர்ந்த பாபு மனைவி அமுதா என்பவருக்கும் சில கிராமங்களை சேர்ந்த இருளர் இன மக்களுக்கு பட்டாவிற்கான உத்தரவு நகலை வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பட்டாக்கள் விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.இதனை தொடர்ந்து காத்திருக்கும் போராட்டம் கைவிடப் பட்டது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.சின்னதுரை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ் அரசு, மாவட்ட பொருளாளர் எஸ்.குமரவேல், மாநில துணைத் தலைவர் இ.கங்காதுரை, மாவட்ட  குழு உறுப்பினர் வி.அந்தோணி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சி.பெருமாள், விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட துணைத்தலைவர் அப்சல் அகமது, வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.ரீசர்,  ஆட்டோ சங்கத்தின் மாவட்ட தலைவர் கரிமுல்லா உட்பட்ட பலர்  கலந்து கொண்டனர்.