districts

img

மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு தின விழா

திருவண்ணாமலை,பிப். 15- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் 31ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 கிளைகளில் சங்க கொடியேற்றி கல்வெட்டு கள் திறக்கப்பட்டது.  செய்யாறு வட்டம், புளிந்தை கிராமத்தில் துவக்கி இறுதியாக வந்தவாசி வட்டத்தில் பாதிரி கிராமத்தில் நிறைவு பெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். மாரி முத்து தலைமை தாங்கினார். வெம்பாக்கம், செய்யாறு, வந்த வாசி ஆகிய வட்டங்களில் 15 கிளைகளில் சங்கக் கொடி யேற்றி, கல்வெட்டு திறந்து வைத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் இரா.சரவணன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.   இதில் மாவட்ட துணைச் செய லாளர் ரேணுகா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் விஜயா, ஆனந்தன், விவசாயிகள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், பொரு ளாளர் உதயகுமார், கரும்பு விவ சாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் பெ.அரிதாசு, சிறுபான்மை நலக்குழு மாவட்டச் செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் மாண வர்களுக்கு திருக்குறள் புத்தகம், வாய்ப்பாடு, பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.