tamilnadu

img

பெங்களூரு மேம்பாலத்துக்கு சாவர்க்கர் பெயர் சூட்ட எதிர்ப்பு...

பெங்களூரு:
பெங்களூருவில் உள்ள எலஹங்காபகுதியில் 400 மீட்டர்நீளத்துக்கு ரூ. 34 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப் பட்டுள்ளது.இதனைத் திறப்பதற்கு முடிவுசெய்த எடியூரப்பா, பாலத்திற்கு வி.டி. சாவர்க்கரின் பெயரைச் சூட்டத் திட்டம் போட்டார்.வி.டி. சாவர்க்கர், மன் னிப்புக் கடிதங்கள் எழுதி விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து, பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக நடந்து கொண்டவர். மகாத்மா காந்திபடுகொலையில் குற்றம்சாட்டப்பட்டு, கடைசி நேரத்தில் தண்டனையிலிருந்து தப்பியவர். இந்து மகா சபை, ஆர்எஸ்எஸ் மதவெறிச் சிந்தனைகளுக்கு மூலகர்த்தாவும் இவர்தான். அப்படிப்பட்டவரின் பெயரை, அனைத்து மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு சூட்டக்கூடாது என்று கர்நாடகத்தில் எதிர்ப்புஎழுந்தது. முன்னாள் முதல்வர் களான சித்தராமையா (காங்கிரஸ்), குமாரசாமி (மஜத) உள் ளிட்டோரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதையடுத்து, கடந்த வியாழக்கிழமையன்று நடைபெறவிருந்த மேம்பால திறப்புவிழா திடீரென ரத்து செய்யப் பட்டு விட்டது.எனினும், “எதிர்ப்புக்குப் பயந்து விழாவை ஒத்திவைக்கவில்லை; கொரோனா ஊரடங்கு காரணமாகவே திறப்புவிழா நடக்கவில்லை. அடுத்தமாதத்தில் முதல்வர் எடியூரப்பா அதே பெயரை சூட்டிதிறந்து வைப்பார்’’ என்று மீசையில் மண் ஒட்டாத கதையாக, பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் கூறியுள்ளார்.