tamilnadu

img

கோலியின் வாக்குவாதம் எதிரொலி

ஐபிஎல் தொடரின் 54-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் மோதின.பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கள நடுவராக பணியாற்றிய இங்கிலாந்தைச் சேர்ந்த நிகெல் லாங் பெங்களூரு வீரர் உமேஷ் யாதவ் வீசிய பந்தை நோபால் என்று அறிவித்தார்.டிவி ரீப்ளேயில் உமேஷ் யாதவ் கோடு மீது காலை வைத்து பந்து வீசியது தெளிவாக தெரிந்தது.இதைப் பார்த்து அதிருப்தியடைந்த பெங்களூரு கேப்டன் விராட் கோலிக்கும் நடுவர் நிகெல் லாங்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நிகெல் லாங் கோலியைச் சமாதானப்படுத்தி னார். ஆனால் கோலி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.போட்டியின் முதல் பாதி முடிந்த பிறகு பெவிலியன் திரும்பிய நடுவர் நிகெல் லாங் கோபத்தில் மைதான அறை கதவை எட்டி உதைத்தார். இதில் கதவு சேதம் அடைந்தது. இதுபற்றி ஐபிஎல் நிர்வாகம் நடுவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.இதற்கிடையே கதவின் சேதத்தைச் சரிசெய்ய ரூ.5 ஆயிரத்தை நிகெல் லாங் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ கவனத்திற்குக் கொண்டு செல்ல கர்நாடக கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.