தில்லி
தில்லியில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வரும் நிலையில், அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. போக்குவரத்து சேவைகள், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. கடைகள் வழக்கம் போல திறக்கப்பட்டன.
இந்த தளர்வு நடைமுறைக்கு வந்த அடுத்த சில மணிநேரங்களில் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தில்லியைப் போல தமிழகத்திலும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.