tamilnadu

img

கீழடி கட்டுமானப்பணியில் தேக்கம்.... முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சென்ற புகார்கள் எதிரொலி... பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு...

மதுரை:
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் அருங்காட்சியகம் அமைக்கும் பணியை இந்த ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சனிக்கிழமை தெரிவித்தார். 

கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கீழடியின் விரிவாக்கமாக அருகே உள்ள அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களிலும் அகழாய்வு தளங்கள் அமைக்கப் பட்டு அகழாய்வு நடந்து வருகிறது.கீழடி உள்ளிட்ட இடங்களில் பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள்கண்டறியப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலை காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் கீழடி உள்ளிட்ட இடங்களில்அகழாய்வு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் பணிகள்தொடங்கி நடைபெற்று வருகின்றன.இந்த நிலையில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் கீழடி வந்து அகழாய்வுத் தளத்தைப் பார்வையிட்டனர்.அதைத் தொடர்ந்து அங்குஅமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்துக்கான கட்டட கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தனர்.அதன்பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கீழடி அகழாய்வு மூலம் பண் டைய கால தமிழர்களின் நகர நாகரிகம் வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது.  கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக கீழடி அகழாய்வுத்தளம் அருகே ரூ.12.21 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்தப் பணி தாமதமாக நடைபெறுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து தற்போது அருங்காட்சியகம் அமைக்கும் பணியை ஆய்வு செய்துள்ளோம்.திட்டப் பணி தொடங்கப்பட்டது முதல் இதுவரை 60 சதவீத பணிகள் முடிந்திருக்க  வேண்டும். ஆனால் 17 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. ஆய்வு குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும். பணி ஒப்பந்த காலமான வரும் 10-ஆவது மாதத்திற்குள்முடிய வாய்ப்பில்லை. விரைந்து பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் அகழ்வைப்பகம் அமைக்கப் பட்ட பின்னர்  கீழடியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். 

அந்தத் திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதியையும் வேறு திட்டங் களுக்கு பயன்படுத்த மாட்டோம். கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரும் திட்டப்பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என்றார்.இந்த ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.பின்னர் மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகத்திற்கான இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடம்,எல்லீஸ் நகர் வீட்டுவசதி வாரிய கட்டடம் உள்ளிட்ட ஏழு இடங்களை ஆய்வு செய்தனர்.பின்னர் எ.வ.வேலு கூறுகையில், “இந்த நூலகம் சுமார் இரண்டுலட்சம் சதுர அடியில் தரை மற்றும்ஏழு தளங்களுடன் கட்டப்பட உள் ளது. முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் நவீன நூலகமாக அமைக்கப்படவுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தும் வகையில், 24 பிரிவுகளாக இந்த நூலகத்தை அமைக்க உள்ளோம். ஒரே நேரத்தில் 600 பேர்அமர்ந்து படிக்கும் வகையில் இந்த நூலகம் கட்டப்பட உள்ளது. இடம் இறுதி செய்யப்பட்ட பிறகு பணிகள் துவங்கி ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்றார்.