எல்டிஎப்-13, யுடிஎப்-12 இடங்களில் வெற்றி
கொச்சி, டிச.18- கேரளத்தில் 12 மாவட்டங்களில் 28 இடங்களுக்கு நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தல்களில் எல்டிஎப் 13 இடங்களிலும் யுடிஎப் 12 இடங்களிலும் பாஜக 2 இடங்களி லும் வெற்றி பெற்றன. ஒரு இடத்தில் யுடிஎப் போட்டி வேட்பாளரான கேரள காங்கிரஸ் (எம்) ஜோஸ்மோன் ஆதரவாளர் வெற்றிபெற்றார். காசர்கோடு, பத்தனம்திட்டா, ஆலப்புழா மாவட்டங்களில் எல்டிஎப் வேட்பாளர்கள் யுடிஎப் இடமிருந்த இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றனர்.
எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி மாவட்டங்களில் கடந்த முறை எல்டிஎப் வெற்றிபெற்ற தலா ஒரு வார்டில் யுடிஎப் வெற்றிபெற்றது. யுடிஎப்பிடமிருந்து ஒரு இடத்தை பாஜகவும், பாஜகவிடமிருந்து ஒரு இடத்தை யுடிஎப்பும் பிடித்தன. கடந்தமுறை சுயேச்சை வெற்றி பெற்ற ஒரு வார்டை இம்முறை யுடிஎப் கைப்பற்றியது. காசர்கோடு நகராட்சியின் ஒரு வார்டை முஸ்லீம் லீக்கிடமிருந்து எல்டிஎப் கைப்பற்றி யது. கோழிக்கோடு மாவட்டத்தில் ஐந்து வார்டு களுக்கு நடந்த இடைத்தேர்தலில் 4 வார்டு களில் எல்டிஎப் வெற்றி பெற்றது. கண்ணூர் மாவட்டத்தில் மூன்று இடங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில் இரண்டு இடங்களை எல்டிஎப் கைப்பற்றியது. கண்ணூர் மாநக ராட்சி கவுன்சிலராக எல்டிஎப் வேட்பாளர் டி.பிரசாந்த் 1276 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். இங்கு யுடிஎப் 1020 ஓட்டுகளையும் பாஜக 145 ஓட்டுகளையும் பெற்றன.