பெங்களூரு:
கொரோனா வைரஸ் தொற்றுநோயை கையாண்ட விதத்திற்காக, கேரள இடது ஜனநாயக முன்னணி, உலகளாவிய அளவில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. கொரோனா தடுப்பில், கேரளம் முன்மாதிரி மாநிலம் என்று உலக சுகாதார நிறுவனம் மட்டுமன்றி, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், மத்திய அரசின் சுகாதாரத்துறை ஆகியவையும் ஒப்புக்கொண்டுள்ளன.
\இந்நிலையில். “கொரோனா தொற்றுப் பரவலை கையாள்வதில் கேரளா முன்னுதாரணமாக உள்ளது” என்று பாஜகவை சேர்ந்தவரும், கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் கே. சுதாகரும் பாராட்டு தெரிவித்துள்ளார்.இந்தியாவில் முதன்முதலாக கடந்த ஜனவரி மாதத்தில், கேரளாவில்தான் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், முன்மாதிரியான திட்டங்கள் மற்றும் செயலூக்கமான நடவடிக்கைகளால் கொரோனாபரவலை விரைவிலேயே கேரள அரசு கட்டுக்குள் கொண்டு வந்தது.
மூன்று மாதங்களில் 512 பேர்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில். அவர்களில் 470-க்கும் அதிகமானோரை தனது சிறப்பான மருத்துவ சிகிச்சைகளால் நோயிலிருந்து குணப்படுத்தி வீடுகளுக்கு அனுப்பிவைத்து விட்டது. 30-க்கும் குறைவானவர் களே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் மட்டுமே இதுவரை உயிரிழந்துள்ளனர்.இதையொட்டி, கொரோனா வைரஸ்பரவலை கேரளம் கட்டுக்குள் கொண்டுவந் தது குறித்தும், அது எவ்வாறு சாத்தியமானது என்பது பற்றியும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகர், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜாவுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கேட்டறிந்துள்ளார்.
இத்தகவலை டாக்டர் கே. சுதாகரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.“நாம் அனைவரும் அறிவோம், இறப்பு விகிதத்தின் அடிப்படையில் கொரோனா தொற்றுப் பரவலை கையாள்வதில் கேரளா
முன்னுதாரணமாக உள்ளது. அது என்னைமிகவும் ஈர்த்தது. அதனால், வீடியோ கான்பரன்சிங் மூலம் கேரள சுகாதார அமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்ள விரும்பினேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது; கேரள பொது சுகாதார அமைப்புஎவ்வளவு வலிமையாக உள்ளது” என்பதைஅறிந்து கொண்டேன் என்று டாக்டர் கே. சுதாகர் கூறியுள்ளார்.
“கேரளத்தில் நோயாளிகள் ஆரம்பத்திலேயே தங்களின் உடல்நிலை குறித்துஉணர்ந்து, தாமாக முன்வந்து மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், கர்நாடக மாநிலத்தில் கடைசி நேரத்தில்தான் மருத்துவமனைக்கு வருகின்றனர். அதனால்தான் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதனால், எந்த ஒரு அமைப்பும் அவர்களை காப்பாற்றுவது இயலாததாகி விடுகிறது” என்றும் கூறியிருக்கும்டாக்டர் சுதாகர், கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கும், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் இதேபோல அவ்வப்போது காணொலி மூலம் கலந்துரையாடல் நடத்துவதற்கு கேரள அமைச்சர் கே.கே. சைலஜா ஒப்புக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக அமைச்சருடனான காணொலி சந்திப்பு குறித்து. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.