tamilnadu

img

ரூ.500 கோடி வருவாய் ஈட்டி ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ சாதனை!

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக லாபம்

திருவனந்தபுரம், ஜன.21- குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை அளிப்பதற்காகவும், மெட்ரோ அல்லாத நகரங்களை இணைக்கும் இலக்குகளுடனும், 2005-ஆம் ஆண் டில் துவங்கப்பட்டது, ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனமாகும்.  கேரள மாநிலம் கொச்சியை தலை மையிடமாகக் கொண்ட இந்த விமான நிறுவனம், 25 விமானங்கள் மூலம் ஆண்டுக்கு 4 மில்லியனுக்கும் அதிக மான பயணிகளை ஏற்றிச் செல்கிறது. நாட்டில் 20 நகரங்களை, பெரும்பாலும் தென்னிந்தியாவை 13 சர்வதேச நக ரங்களுடன் இணைக்கிறது. உள் நாட்டுச் சேவையில் 6 சதவிகிதப் பங்க ளிப்பையும், சர்வதேச சேவையில் 13.3 சதவிகித பங்களிப்பையும் கொண்டி ருக்கிறது. தற்போது இந்த நிறுவனம் 2016- ஆண்டிலிருந்து தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக லாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.

‘ஜெட் ஏர்வேஸ்’ நிதிப் பற்றாக் குறை காரணமாக இயக்கத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ‘இண்டிகோ’ மற்றும் ‘ஸ்பைஸ்ஜெட்’ இரண்டாவது காலாண்டில் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக அறிவித்துள் ளன. ‘ஏர் இந்தியா’ மத்திய அரசால் விற்ப னைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவுக்கும் இடையில்தான், ‘ஏர் இந்தியா’வின் குழந்தை நிறுவன மான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ மட்டும், 2019- 2020 நிதியாண்டில் ரூ. 500 கோடி லாபமீட்டும் நிறுவனமாக மாறியிருக்கிறது.  2015 ஆம் ஆண்டில், 19 விமானங் களை மட்டுமே கொண்டிருந்த ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’, கடந்த நான்கு ஆண்டுகளில் மேலும் 6 விமானங் களை வாங்கியுள்ளது. 13 விமானங்க ளின் பெயரில் பெறப்பட்டிருந்த கடனை யும் அடைத்துள்ளது. 2015-16இல் ‘ஏர் இந்தியா எக்ஸ் பிரஸ்’ முதன்முறையாக, ரூ. 362 கோடி லாபம் ஈட்டியது. இது 2016-17இல் ரூ.237 கோடி, 2017-18இல் ரூ. 218 கோடி என்று குறைந்து, 2018-19இல் ரூ.169 கோடி மட்டுமே லாபம் என்றானது. ஆனால், 2019 -20இல் ஒரே பாய்ச்சலாக ரூ. 500 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.