இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையினால் வாகன விற்பனையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக, சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.
சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் பயணிகளின் வாகனம் மற்றும் கார் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது.இவ்வீழ்ச்சியானது தொடர்ந்து 10 வது மாதமாக தொடர்கிறது.இந்நிலையில் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் என அனைத்து பிரிவு வாகன விற்பனைகளிலும் சராசரியாக 23.55% சரிவைக் கண்டுள்ளது.மேலும் 1997-98 முதல் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட மிக மோசமான சரிவாக இது கருதப்படுகிறது என கூறியுள்ளனர்.