tamilnadu

img

புல்லாங்குழல் இசைத்தால் பால் அதிகம் சுரக்கும்!

சில்சார்:
பகவான் கிருஷ்ணர் பயன்படுத் திய ஒரு சிறப்பு ஸ்ருதியில்புல்லாங்குழலை இசைத்தால், மாடுகள் பால் தருவது பல மடங்கு அதிகரிக்கிறது என்பது நவீன விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ. திலீப்குமார் பால் தெரிவித்துள்ளார்.அசாம் மாநிலத்தில் வங்க மொழி பேசுபவர்கள் அதிகளவில் உள்ளனர். சுமார் 35 லட்சம் வங்காளிகள் அசாமில் உள்ளனர். இங்குள்ள சில்சார் தொகுதி பாஜக எம்.எல்.ஏ திலீப் குமார்பாலும் வங்காளி ஆவார்.இந்நிலையில், கடந்த ஞாயிறன்று சில்சாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றைத் துவங்கி வைத்த திலீப் குமார் பால்,“பகவான் கிருஷ்ணர் பயன்படுத்திய ஒரு சிறப்பு ஸ்ருதியில்புல்லாங்குழலை இசைத்தால், மாடுகள் பால் தருவது பல மடங்கு அதிகரிக்கிறது என்பது நவீன விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று அள்ளி விட்டுள்ளார்.மேலும், ‘நான் விஞ்ஞானி அல்ல’ என்றும் தன்னடக்கத் துடன் கூறிக்கொண்டுள்ள அவர், இந்திய கலாச்சாரத்தில் உள்ள வாஸ்து அறிவியலை, விஞ்ஞானிகளும் தற்போது ஒப்புக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.