அரியலூர், ஆக.17- ரேசன் கடைகளில் விநியோகம் செய்யும் பொருள்க ளையும் இருப்பு உள்ள பொருள்களையும் தகவல் பலகை யில் எழுதி மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதன் மூலம் கடத்தல், பதுக்கலை தடுத்து நிறுத்த முடியும். ஒரு முறை பொருள் வாங்க மக்களுக்கு சூழ்நிலை இல்லை யென்றால் மறுமாதம் சேர்த்து வழங்கப்பட வேண்டும். ஏனெ ன்றால் பொருள்கள் வாங்காமலேயே வாங்கியதாக பல கடை களில் பதிவு செய்யப்படுகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு பொரு ள்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஜெயங்கொ ண்டம் டிஎஸ்ஓ-விடம் கொடுத்தனர். மாதர் சங்க மாவட்டச் செய லாளர் பத்மாவதி, ஒன்றிய செயலாளர் அம்பிகா, ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கொளஞ்சி, அம்மா பல்கீஸ், அமுதா ஆகியோர் உடனிருந்தனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாதர் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் மல்லிகா தலைமை வகித்தார். பின்னர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.