ஒரு பக்கம் அரசுப் பள்ளிகளை பாதுகாக்கும் போராட்டத்திலும் அவற்றின் மாண்புகளை மீட்கும் முயற்சிகளிலும் ஆயிரக்கணக்கான தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்களும் உளப் பூர்வமாக ஈடுபட்டுள்ளனர். கல்வி உரிமைப் போராளிகள் அவர்களுக்குப் பக்கபலமாக நிற் கின்றனர். இன்னொரு பக்கம் அரசுப் பள்ளிகள் மீதான அசூயை உணர்வுகளை வளர்ப்பதில், தனி யார் பள்ளிகளே தேவலாம் என்ற எண்ணத்தைத் தூண்டுவதில் பல தலைமை ஆசிரியர்களும், அவர்களுக்கு உடந்தையாகப் பல ஆசிரியர்க ளும் இறங்கியுள்ளனர். இரண்டாவது வகையைச் சேர்ந்த சில தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தற்போது கையில் எடுத்துள்ள “வருவாய்” உத்தி பற்றிய, அதன் மூலம் ஒட்டுமொத்தத்தில் அரசுப் பள்ளிகள் மீதும் ஆசிரியர்கள் மீதும் களங்கக்கறை பூசப்படுவது பற்றிய கதைதான் இது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 46,000 அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளி களும் உள்ளன. இவற்றில் பயிலும் மாணவர் களின் எண்ணிக்கை 69 லட்சம். அரசுப்பள்ளி களில் தமிழ்வழி பயில்வோருக்கு ஏற்கனவே கல்விக் கட்டணம் கிடையாது. ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்ட பிறகு கட்டணம் வசூ லிக்கப்பட்டது. 6, 7, 8 வகுப்புகளுக்கு ரூ.200, 9, 10 வகுப்பகளுக்கு ரூ.250, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ரூ.500 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படி வசூலிக்கப்பட்டது.
இதனிடையே ஆங்கில வழி என்பதால் அரசுப் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதா என்ற எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து இந்த மாதம் 2 ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆங்கில வழி வகுப்புகளுக்குக் கட்டணம் வசூ லிக்கப்பட மாட்டாது, இதுவரையில் வசூலிக்கப் பட்ட பணம் திருப்பிக்கொடுக்கப்படும் என்று அறிவித்தார். உடனே அது பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாகவும் வெளியானது. அந்த அறிவிப்பின்படி பெற்றோர்களிடம் பணத் தைத் திருப்பிக்கொடுத்த தலைமையாசிரியர்க ளும் உண்டு. திருப்பிக் கொடுக்காதவர்களும் உண்டு. திருப்பிக் கொடுக்க மறுக்கிறவர்களும் உண்டு! திருப்பிக் கொடுக்காத தலைமை ஆசிரியர்க ளில் ஒரு பகுதியினர் வசூலித்த பணத்தை தங்களது பள்ளிகளில் பல்வேறு தேவைகளுக்காக பயன் படுத்துகின்றனர். குடிநீர் வசதிகளை ஏற்படுத்து வது, கழிப்பறைகளை சீர்படுத்துவது, புதிய மின் விளக்குகளையும் விசிறிகளையும் பொருத்து வது, கணினிகளைச் சரிப்படுத்துவது போன்ற பணிகள் இந்தப் பணத்தில் மேற்கொள்ளப்பட்டுள் ளன. அரசாங்கமோ பள்ளிக்கல்வித்துறையோ செய்ய முன்வராத இந்த பணிகளை தலைமை ஆசிரியர்கள் இவ்வழியில் தங்கள் பொறுப்பில் செய்வதற்கு, பணத்தை திரும்பப் பெற முடியாத பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர், சக ஆசிரியர்களும் துணை நிற்கின்றனர்.
மற்றொரு பகுதி தலைமையாசிரியர்களோ, வசூலித்த பணத்துக்கு ரசீதும் கொடுக்க வில்லை, அந்தப் பணத்தை வைத்து இப்படிப் பட்ட பயனுள்ள பணிகளையும் மேற்கொள்ள வில்லை. இவர்களில் அரசாங்கம் முன்பு நிர்ண யித்ததைத் தாண்டி 300, 500, 1,000 என்று மூன்று பிரிவுகளுக்கும் வசூலித்தவர்களும் இருக்கிறார் கள். இதற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்க முடி யாத ஆசிரியர்கள் ஒருபுறம் மௌனச் சங்கடத்து டன் பார்த்துக் கொண்டிருக்க, சிலர் கூட்டுச் சேர்ந்து ஒத்துழைக்கிறார்கள். ஒரு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,000 பிள் ளைகள் படிக்கிறார்கள் என்றால் எவ்வளவு வசூ லாகும்! அதிலிருந்து அதிகாரிகளுக்கு கப்பம் செலுத்துவதும் நடக்கிறதாம். அதற்கும் மேலே போகிறதா என்பது பற்றி ஆராய வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு செய்தியாக வெளியானது பல பெற்றோர்களுக்குத் தெரிய வில்லை. செய்தியை அறிந்தும், போனால் போகட்டும். தனியார் பள்ளிகளை விட மிகக் குறை வான தொகைதானே என்று பலர் கண்டுகொள்ளா மல் விட்டிருக்கிறார்கள். சிறு தொகையானாலும் குடும்பச் செலவுக்கு உதவுமே என்ற எண்ணத்து டன் பலர் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரி யரைச் சந்தித்துப் பணத்தை திருப்பிக் கேட்டி ருக்கிறார்கள். பல பெற்றோர்கள் தங்களது குழந் தைகள் மூலமே கேட்டுவிட்டிருக்கிறார்கள். அந்த குழந்தைகளுக்கு கிடைத்ததெல்லாம் “படிக் கிறதை விட்டுட்டு இதிலே ஏன் தலையிடுறீங்க,” என்ற வசவும், “டி.சி. வாங்குறதுக்கு என்கிட்ட தானே வந்தாகணும்,” என்பது போன்ற அச்சுறுத் தல்களும்தான். பல பள்ளிகளில் மாணவர்களின் உரிமைக்காக வாதாடும் ஆசிரியர் அமைப்புகளைச் சேர்ந்தவர் களும் இருக்கிறார்கள். அவர்களை மனதில் வைத்துக்கொண்டு, “உங்களை யார் தூண்டி விட்டது, அவரா…. இவரா… ” என்று மிரட்டியிருக்கி றார்கள் சில தலைமை ஆசிரியர்கள். சில இடங் களில் துணிச்சலாகக் கேள்வி கேட்ட குழந்தை களை மட்டும் அழைத்துப் பணத்தைக் கொடுத்த னுப்பியிருக்கிறார்களாம்.
தொகை பெரியதா, சிறியதா என்பது பிரச்ச னையே இல்லை. அரசின் அதிகாரப்பூர்வ அறி விப்பு அப்பட்டமாக மீறப்படுகிறது. ஏழைப் பெற்றோர்களும் மாணவர்களும் ஏய்க்கப்படு கிறார்கள். கல்வியின் பெயரால் பெரியதொரு ஊழல் நடக்கிறது. “அட, அரசுப் பள்ளி தலைமை யாசிரியராக இருந்துகொண்டே இவ்வளவு வரு மானம் சேர்க்க முடியும் என்று வழிகாட்டுகிறார் களே,” என்று பெருமைப்படுகிற விசயமும் அல்ல இது. அரசுப் பள்ளி இயக்கத்தின் மாண்பைச் சீர்கு லைக்கிற இத்தகைய நெறியற்றோரைக் கண்டு பிடித்து, முறைகேடுகள் முற்றுவதற்குள் முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பு பள்ளிக் கல்வித் துறைக்கு இருக்கிறது, அரசுக்கு இருக்கிறது. துறை யையும் அரசையும் அசைய வைக்கிற பொறுப்பு கல்வி உரிமை இயக்கங்களுக்கு இருக்கிறது.
-அ.கு.