நாகப்பட்டினம், அக்.20- நாகை மக்கள், தங்கள் பகுதிக்கு அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட வேண்டும் என நீண்ட காலமாகக் கோரி வந்துள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைத்திட, மத்திய அரசு, தமி ழக அரசுக்கு அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு, நாகப்பட்டினம் அருகில் மருத்துவக் கல்லூரி அமைந்திட உரிய இடத்தைத் தேர்வு செய்து அனுப்பிட, நாகை மாவட்ட ஆட்சியருக்கு உத்தர விட்டிருந்தது. இதையடுத்து வருவாய் அலுவலர்கள், மருத்துவர்கள் ஆய்வு செய்து, நாகை ஒன்றியத்தில் ஒரத்தூர் கிராமத்தையொட்டி 20 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்து, மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் பரிந்துரையைத் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஒரத்தூர் கிராமம், நாகையிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சிக்கல் வழியாகவும், பாப்பாக்கோயில் வழியாகவும் ஒரத்தூர் செல்லலாம். இங்கு மருத்துவக் கல்லூரி அமைவ தால், ஒரத்தூர், அகரஒரத்தூர், வேர்குடி, புதுச்சேரி, ஆவராணி, பாப்பாகோயில், செம்பியன்ககாதேவி, வடுகச்சேரி, சிக்கல் உள்ளிட்ட பல கிராமங்கள் விரி வாக்கம் பெறும் புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்படும் எனத் தெரிகிறது.