அரியலூர், ஆக.18- அரியலூர் மாவட்டம் திரு மானூர் ஒன்றியம் சிபிஎம் அலுவலகத்தை சேதப்ப டுத்திய பாஜக பிரமுகர் மீது கடந்த இரண்டு மாதங்க ளாகியும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை, வருவாய்த்து றைக்கு கண்டனம் தெரி விக்கும் வகையில் அரியலூர் அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் பல்வேறு அச்சுறுத்தல்க ளுக்கு இடையில் நடைபெற்றது. திருமானூர் ஒன்றிய செய லாளர் எஸ்.பி.சாமிதுரை தலைமை வகித்தார். அரிய லூர் ஒன்றிய செயலாளர் துரை.அருணன், மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், மாவட்டக் குழு உறு ப்பினர்கள் கலந்து கொண்ட னர்.