அரியலூர், ஜூலை 26- அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகில் உள்ள காவ னூர், அம்பாபூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி யில் சனிக்கிழமை பள்ளியின் அலுவலகக கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தன. இப்பள்ளியில் சுமார் 500 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த சில வருடங்களாக இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சியில் பெற்று வருகிறது. இந்நிலையில் கொ ரோனா நோய்தொற்று காரணமாக பள்ளி மூடப்பட்டுள்ள நிலை யில் பள்ளி வாயில் கதவு, அலுவலக கதவு உள்ளிட்டவை களை உடைத்து அலுவலகத்தில் புதிய லேப்டாப் 4, கிராம பொதுமக்கள் வசூல் செய்து 40 ஆயிரம் மதிக்கத்தக்க 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 1 கேமரா மற்றும் பதிவு செய்யப்படும் ரிசீவர் உள்ளிட்டவை களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த தகவலின்பேரில் கயர்லாபாத் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் திறந்தவெளியில் பாதுகாப்பின்றி கிடப்பது மணவர்களின் பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.