ஏமன் நாட்டில், அல்கொய்தா தலைவர் காசின் அல் ரிமி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவரான காசிம் அல் ரிமி, ஏமன் நாட்டில் 8க்கும் மேற்பட்ட தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளார். இவர் ஒசாமா பின் லேடனுக்கு பிறகு, அமெரிக்காவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தார். ரிமியை பிடிக்க அமெரிக்க ராணுவம் பல முறை முயற்சித்து தோல்வி அடைந்தது. இந்நிலையில், அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் கவுசிம் அல் ரிமி மற்றும் அந்த அமைப்பின் துணைத் தலைவர் இருவரும் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமையன்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “ஏமனில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் காசிம் அல் ரிமி கொல்லப்பட்டார். மேலும், அந்த அமைப்பின் துணைத் தலைவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்” என்று தெரிவித்துள்ளது.