அமெரிக்காவில் வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்ட பனிப்பொழிவினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்புள்ளாகியது.
இது குறித்து அந்நாட்டு தேசிய வானிலை மையம் கூறியதாவது, மத்திய மற்றும் வடக்கு அமெரிக்காவில் எப்போதும் இல்லாத அளவிற்கு குளிர்ந்தநிலை மற்றும் அதிவேக காற்றினால் பனிப்பொழிவு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வடக்கு டகோடா பகுதியில் ஏற்பட்ட பனிப்புயலினால் சாலைகள் முழுவதும் பனிகளால் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைகள் முழுவதும் 3 அடி ஆழத்திற்கு பனி படர்ந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வீட்டை விட்டு வெளிவராத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது