tamilnadu

img

மழை நீரை பாட்டில்களில் விற்கும் அமெரிக்க நிறுவனம்!

அமெரிக்காவில் குடிநீர் நிறுவனம் ஒன்று, மழை நீரை சேமித்து பாட்டிலில் நிரப்பி விற்பனை செய்து வருகிறது. இது மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடி நீரையே எடுத்து பாட்டில்களில் எடுத்து விற்பனை செய்து வரும் நிலையில், அமெரிக்காவின் ரிச்சர்ட்ஸ் ரெயின் வாட்டர்  என்ற நிறுவனம் மழை நீரை சேமித்து, பாட்டில்களில் விற்பனை செய்து வருகின்றது. டெக்சாஸ் மாகாணத்தில், கடந்த 2000-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், மழைநீரை அரை லிட்டர் பாட்டில்களாக விற்பனை செய்கிறது.

மொட்டை மாடிகளில் இருந்து வரும் மழை நீரை முதல் 10 நிமிடங்கள் சேகரிக்காமல் விட்டுவிட்டு, அதன்பின் வரும் நீரை, ஃபைபர் கண்ணாடிக் குடுவையில் அடைத்து, யூ.வி கதிகள், ரிவர்ஸ் ஆஸ்மாஸில், குளோரினுக்கு பதில் ஓசோன் ஆகிய மூன்று நிலை வடிப்பான் மூலம் சுத்திகரிக்கப்படுகிறது. ஆயிரம் சதுர அடி இடத்தில், 3 சென்டி மீட்டர் மழை பெய்தால், அதன் மூலம் 2,082 லிட்டர் தூய்மையான நீர் கிடைக்கும். 

டெக்சாஸ், கில்ன், மிஸ்ஸிஸிப்பி ஆகிய மாகாணங்களில் வீடுகளின் 49 ஆயிரம் சதுர மேற்கூரைகளில் இருந்து ஆண்டில் சராசரியாக 152 சென்டிமீட்டர்  பெய்யும் மழை நீரை சேமித்தால் அதிலிருந்து கிடைக்கும் 60 லட்சம் லிட்டர் நீர் 2 ஆயிரம் பேரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதாகக் அந்த நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் அனுமதி பெற்ற இந்த முதல் நிறுவனத்துக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.