நியூயார்க், அக்.6- இராக்கில் வேலையின்மை மற்றும் அரசின் ஊழலுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதில் 99 பேர் வரை பலியாகியுள்ளனர். இந்த சம்ப வத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரி வித்துள்ளது. தலைநகர் பாக்தாத்தில் உள்ள வரலாற்றுச் சின்னமான தரீர் சதுக்கத்தை நோக்கி பேரணியாக சென்ற ஆயி ரத்துக்கும் அதிகமானவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி னர். பின்னர் போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறியதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இராக் நாட்டின் பல மாகாணங்களில் போராட்டம் பரவி யுள்ளது. இதில் போராட்டக்காரர்கள், பாதுகாப்பு படையினர் என 99 பேர் உயிரிழந்தனர். சுமார் 4 ஆயிரம் பேர் காயம டைந்துள்ளனர். இதுதொடர்பாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கை யில்,அரசுக்கு எதிரான போராட்டத்தில் 99 பேர் பலியானது துன்பகரமானது. இது நிச்சயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.