அமெரிக்கா : உணவுத் திருவிழாவில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கு பகுதியில் சான் ஜோஸ் நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கில்ராய் நகரில் ஆண்டுதோறும் ‘பூண்டு பிரியர்கள்’ நடத்தும் உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மூன்று நாள் நடந்த திருவிழாவின் இறுதிநாளான ஞாயிறன்று ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.