கஜகஸ்தான் உலகளாவிய முதலீட்டாளர் மாநாட்டில், 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை முக்கிய இந்தியா நிறுவனங்கள் கைப்பற்ற உள்ளது.
மத்திய ஆசிய சந்தையில், இந்தியா அதன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், இந்தியாவின் முக்கைய நிறுவனங்கள் மே 16-17 தேதிகளில், அஸ்தானா பொருளாதார மன்றம் மற்றும் கஜகஸ்தான் உலகளாவிய முதலீட்டாளர் மாநாட்டு (KGIR - 2019) ஆகியவற்றில் பங்கேற்றன. அதில் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் முன்னணி நிறுவனங்களான பஞ்சாப் நேஷனல் வங்கி, என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி. விடெக் லிமிடட், சிஜி கார்ப் குளோபல், இந்தியா பவர் மற்றும் இந்திய நிறுவனங்களான இந்தியா வெஸ்ட், ஆர்வி ஹெல்த்கேர், ரெபெக்ஸ் எனர்ஜியின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதில் தெங்கிரி வங்கிகளின் பணிகள் குறித்தும், உலகளவில் வங்கி சேவையை மேம்படுத்துவதற்கான தற்போதைய நடைமுறைகள் மற்றும் பிற நாடுகளின் உள்ள பொருளாதார தாக்கங்களை குறித்தும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சிஇஓ சுனில் மேத்ராவுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதை அடுத்து சிஜி கார்ப் குளோபல் நிறுவனத்தின் தலைவர் பினோத் சவுத்திரி, அவர் நிறுவனத்தின் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை குறித்தும் கஜகஸ்தான் பிரதமருக்கு தெரிவித்தார். இதை அடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ஆல்மாத்தியில் வணிக வளாகம் அமைப்பதில் இந்திய வணிகர்கள் ஆர்வம் தெரிவிக்கப்பட்டுள்ளன. சிஜி கார்ப் குளோபல் கைபற்றிய நூர் சுல்தானில் உள்ள ஹில்டன் ஓட்டலின் பங்குகளை குறித்த பிரச்சனைகளை, "எக்ஸ்போ" நிர்வாகத்துடனான சந்திப்பில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், ஆல்மாத்தியில், ஆண்டிபயாடிக் மருந்துகள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை கசாக் இன்வெஸ்ட் நிறுவனம் மற்றும் ஆர்வி ஹெல்த்கேர் நிறுவனம் கையெழுத்திடப்பட்டது.